பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

10. பாண்டியர் அரசியல்

இனி, பாண்டியர் அரசியல் முறைகளை விளக்குவாம். பழைய தமிழ் நூல்களாலும், கல்வெட்டுக்களாலும், செப்பேடு களாலும் அறியப்படும் அரசியல் முறைகள் எல்லாம் நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மூவேந்தர்க்கும் உரியனவேயாகும். ஆயினும், அம்முறைகள் பாண்டியர்க்கும் உரியனவாயிருத்தல் பற்றி அவற்றை ஈண்டு ஆராய்ந்து சுருங்கிய முறையில் விளக்குதல் பொருத்தமுடைத்து.

1. பாண்டி மண்டலத்தின் உட்பிரிவுகள்

பாண்டி வேந்தர்கள் தம் ஆணை செல்லுமாறு தொன்று தொட்டு ஆட்சி புரிந்துவந்த பாண்டி மண்டலம் என்பது மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மூன்று ஜில்லாக்களையும் புதுக்கோட்டை நாட்டில் வெள்ளாற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதிகளையும் தன்னகத்துக்கொண்டு விளங்கிய நிலப்பரப்பாகும். இது, பரந்த நிலப்பரப்பினையுடையதாயிருத் தலின், எவ்விடத்தும் ஆட்சி நன்கு நடைபெறுமாறு பல நாடு களாக முற்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தது. கடைச்சங்க நாளிலும் இம்முறை வழக்கத்தில் இருந்தது என்று தெரிகிறது. இதனை,

6

எனவும்,

முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர்'

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே'

(புறம்-110)

(புறம்-242)