பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

83

சாத்தன் குணபத்தன் அரசரண சேகரனான இராசகேசரி மூவேந்த வேளான் ஆவன்'. அத்திருப்பணி. உத்தம சோழன் ஆட்சியில் நடைபெற்றதாகும்.

இனி செம்பியன் மாதேவி கற்றளிகளாக அமைத்த பிற கோயில்கள் விருத்தாசலம்', திருகோடிகா', தென் குரங்காடு துறை, செம்பியன்மாதேவி, திருவாரூர் அரநெறி, திருத்துருத்தி', ஆநாங்கூர், திருமணஞ்சேரி', திருவக்கரை" என்னும் ஊர் களிலுள்ள சிவாலயங்களாம். அவற்றுள், முதல் இராசராசசோழன் ஆட்சியின் 16 ஆம் ஆண்டாகிய கி. பி. 1001- ல் இவ்வம்மை திருவக்கரைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்தமையே தன் வாழ்நாளின் இறுதியில் புரிந்த திருப்பணி எனலாம். மற்றும் பல கோயில்களுக்கு இம்மாதேவி புரிந்த தொண்டுகள் கல்வெட்டுக்களில் மிகுதியாகக் காணப்படு கின்றன. விரிவஞ்சி, அவையெல்லாம் ஈண்டு எழுதப்படவில்லை.

முதல் இராசராசசோழன் மகனாகிய கங்கைகொண்ட சோழன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாய முடையார் கோயிலில் கி. பி. 1019 இல் இவ்வம்மையின் படிமம் எழுந் தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்". எனவே, இவ்வம்மை இறைவன் திருவடியையடைந்த அண்மையிலேயே தெய்வமாகக் கருதிக் கோயிலில் படிமம் வைத்து முடிமன்னனால் வணங்கப் பெற்றுள்ளமை அறியத்தக்கது.

1. Ibid, No.147.

2. Ins. 47 of 1918.

3. Ins. 36 of 1931.

4. S.I. I., Vol. III, No. 144.

5. Ins.485 of 1925.

6. Ins. 571 of 1904.

7. Ins. 103 of 1926; துருத்தி - குற்றாலம்.

8. Ins. 75 of 1926.

9. Ins. 9 of 1914.

10. Ins.200 of 1904.

11. Ins 481 of 1925