பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

1

87

ஐந்தாம் ஆண்டில் திருவேதிகுடி, திருவிசலூர் என்னும் ஊர் களிலும் ஆறாம் ஆண்டில் திருச்சோற்றுத் துறையிலும்2 வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்கள் இவனை இராசராசன் என்றே கூறுகின்றன. அவற்றையெல்லாம் ஆராயுமிடத்து, இவ்வேந்தன் தான் அடைந்த வெற்றி காரணமாக கி. பி. 988 ஆம் ஆண்டிலேயே இராசராசன் என்னும் பெயரை எய்தினன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, அவ்வாராய்ச்சியாளர் கருத்து ஒரு சிறிதும் பொருந்தாமை காண்க.

தன் சிறிய தாதையாகிய உத்தமசோழன் ஆட்சியில் இளவரசுப் பட்டம் கட்டப் பெற்றிருந்த இவ்விளங்கோ, அவன் இறந்த பின்னர், கி. பி. 985 ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்று அரியணை யேறினான். பிற்காலச் சோழ மன்னர்கள் ஒருவர் பின்னொருவராக மாறி மாறிப் புனைந்துகொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் இவ்வரசன் இராசகேசரி என்ற பட்டம் பூண்டு ஆட்சிபுரியத் தொடங்கினான். பிற்காலச் சோழர் குல முதல்வனாகிய விசயாலய சோழனால் அடிகோலப் பட்ட சோழ இராச்சியம் இராசராச சோழன் ஆட்சியில்தான் உயர்நிலையை எய்திற்று. இவன் இயற்கையில் ஒப்பற்ற ஆற்றலும் வீரமும் நுண்ணறிவும் படைத்தவனா யிருந்தமையோடு சற்றேறக் குறைய முப்பது ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரியுமாறு நீடிய ஆயுளைப் பெற்றிருந்தமையும் சோழ இராச்சியம் இவன் ஆட்சியில் யாண்டும் பரவிப் பெருகுவதற்குக் காரணமா யிருந்தது எனலாம். இவன் புதல்வன் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் மிகப் பெருகிக் கடல் கடந்தும் பரவியிருந்ததாயினும் அதற்கு அடிகோலி வைத்தவன் நம் இராசராச சோழனேயாவன். அறிவும் அன்பும் நிறைந்த அரசியல் அதிகாரிகளையும் வீரஞ்செறிந்த படைத் தலைவர் களையும் இவன் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆட்சி நடத்தி யமையே இவன் எக் கருமங்களையும் எளிதிற் நிறைவேற்று வதற்கு ஏதுவாக இருந்தது என்பது ஒருதலை.

1. Ibid, No. 625; Ins. 19 of 1907.

2. Ibid, No. 610.

ம்

3. Mysore Gazetteer, Vol. II, part II, p. 943.