பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

109

இராசமார்த்தாண்டன், தெலுங்ககுல காலன், கீர்த்திப் பராக்கிரமன் என்பன. அவற்றுள் க்ஷத்திரிய சிகாமணி முதலாகவுள்ள ஏழு சிறப்புப் பெயர்கள், இராசராசன் காலம் முதல் சோழ மண்டலத்தில் வள நாடுகளின் பெயர்களாகவும்' வழங்கி வந்தமை அறியத்தக்கது. அன்றியும் சயங்கொண்ட சோழன், மும்முடிச் சோழன், நிகரிலி சோழன் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் சயங்கொண்ட சோழ மண்டலம் மும்முடிச் சோழ மண்டலம், நிகரிலி சோழ மண்டலம் என முறையே தொண்டை மண்டலம், ஈழ மண்டலம், நுளம்பபாடி என்பவற்றின் பெயர் களாகவும் வழங்கப் பெற்றுள்ளன. பல ஊர்களும், பேரூர் களிலுள்ள சேரிகளும் இராசராச சோழனுடைய சிறப்புப் பெயர்களையுடையனவாய் அந் நாட்களில் நிலவின என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. அவற்றுள் சில, அப்பெயர் களுடன் இக்காலத்தும் இருக்கின்றன.

அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர் போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண் மொழித் தேவன் என்பது வழக்கற்றுப் போயிற்று. இவன் தன் பெயராகிய இராசராசன் என்பது என்றும் நின்று நிலவ வேண்டும் என்ற எண்ணமுடையவனாய்த் தலைநகராகிய தஞ்சாவூரில் மாபெருங் கோயில் ஒன்றை எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளான்.

அம்மாடக் கோயில்' பிற்காலச் சோழர் காலத்துச் சிற்பத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இராசராசனது பெருமைக்கும் புகழுக்கும் சிவபத்திக்கும் ஒரு கலங்கரை விளக்காகவும் கண்டோர் யாவரும் வியக்குமாறு வானளாவ நின்று நிலவுவது யாவரும் அறிந்ததொன்றாம். 'பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி 1. சோழ மண்டலத்தில் அந்நாளில் இருந்த வளநாடுகள், அருண்மொழிதேவ வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு உய்யக்கொண்டான் வளநாடு, நித்த வினோத வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசாசிரிய வளநாடு, இராசராச வளநாடு, இராசேந்திரசிங்க வளநாடு என்பன.

2.S. I. I., Vol. II, No. 1.