பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இராஜராஜேச்வரம்' என்னும் கல்வெட்டுப் பகுதியினால் இராசராசன் கோயில் எடுப்பித்த இடமும் அக்கோயிலின் பெயரும் அஃது அமைந்துள்ள நாடும் வள நாடும் நன்கு புலனாகும்.

இனி, இவன் எடுப்பித்த இராசராசேச்சுரம் என்னும் அக் கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடையது. அதன்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது அதன் உச்சியில் போடப் பெற்றிருப்பது ஒரே கருங்கல். அஃது ஏறக்குறைய எண்பது டன் எடையுள்ளது என்றும்" விமானத்தின் மேல் அமைக்கப்பெற்றுள்ள செப்புக் குடம் 3083 பலம் நிறையுடையது என்றும் அக்குடத்தின் மேல் போடப்பட்டுள்ள பொற்றகடு 2926/2 கழஞ்சு கொண்டது என்றும் அவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

5

அக்கோயிலின் திருப்பணி இவ்வேந்தனது ஆட்சியின் 19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 23-ஆம் ஆண்டில் பெரும் பாலும் நிறைவேறிவிட்டது என்று தெரிகிறது. இவன் ஆட்சியின் 25-ஆம் ஆண்டு 2-ஆம் நாளில் தூபித்தறியில் வைப்பதற்குப் பொற்றகடு வேய்ந்த செப்புக்குடம் கொடுக்கப்பட்டிருத் தலால்' அக்காலத்தில் தான் திருப்பணி முடிவுற்றுக் குடமுழுக்காகிய கடவுண் மங்கலமும் நடைபெற்றிருத்தல் வேண்டும். எனவே, அந்நிகழ்ச்சி கி. பி. 1010-ஆம் ஆண்டில் நடைபெற்றதாதல் வேண்டும். பிறகு, இவன் தன் ஆட்சியின் 26- ஆம் ஆண்டு 20ஆல் அக்கோயில் விமானத்தில் கல்வெட்டுக்கள் வரைதற்குக் கட்டளையிட்டிருப்பதும் அவ்வாண்டிற்கு முன் அத்திருப்பணி முடிவெய்தியிருத்தல் 1. S.I.I, Vol. II, page 2.

2. The Great Temple at Tanjore, p. 6.

3. Ibid, p. 8.

4. Ibid, p. 9.

5. S. I. I., Vol. II, p.3.

6. Ibid.

7.S. I. I., Vol. II, No.1.

8. Ibid, Vol. II, page 2