பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

இராசாதிராசன் வீற்றிருந்த யானையைத் தாக்கின. அதனால், அவ்யானையும் இறக்கவே, அதன் மீதிருந்த இராசாதிராசனும் பகைவர் அம்பிற்கு இலக்காகி விண்ணுலகெய்தினான்.1 குந்தளப் படைகள் சோணாட்டுப் படைகளை நாற்புறத்திலும் தாக்கவே அப் படைகள் அதனைப் பொறுக்க முடியாமல் குழப்பமடைந்து புறங்காட்டத் தொடங்கின.

3

அந்நிலையில் இரண்டாம் இராசேந்திர சோழன் தன் பட்டத்து யானைமீதேறிப் போர்க்களஞ்சென்று, 'அஞ்சேல் அஞ்சேல்!' என்று அபயங்கூறிச் சோணாட்டுப் படைகட்கு வீரவுணர்ச்சியுண்டுபண்ணி, அப்படைகளுள் அமைதி நிலவுமாறு செய்து, மீண்டும் சளுக்கியருடன் போர் செய்ய தொடங்கினான்.' இராசேந்திரன் ஏறியிருந்த யானையைச் சளுக்கியப் படைகள் முன்போல ஒருமுகமாகத் தாக்கவே அவ்யானையின் நெற்றியில் அம்புகள் தைத்தன. ஆகவமல்லனுடைய கூரிய அம்புகள் இராசேந்திரனுடைய குன்றுபோன்ற புயத்திலும் தொடையிலும் தைத்துப் புண்படுத்தின. அதுபோது யானைகளின் மேலிருந்து போர்புரிந்து கொண்டிருந்த சோணாட்டு வீரர் பலர் உயிர் துறந்தனர். எனினும் சளுக்கியப் படைத்தலைவர்களாகிய சயசிங்கன், புலகேசி, தசபன்மன், அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னிநுளம்பன் என்போர் இராசேந்திரனால் கொல்லப்பட்டனர். மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனும் தோல்வியுற்றோடினான். வன்னியரேவன், துத்தன், குண்டமையன் என்ற எஞ்சியிருந்த சளுக்கியப் படைத் தலைவர்களும் மற்றும் பல சளுக்கிய அரச குமாரர்களும் போர்க்களத்தில் நிற்க முடியாமல் அஞ்சிப் புறங்காட்டி யோடி விட்டனர். இறுதியில் நம் இராசேந்திரனே வெற்றித் திருவை மணந்து வாகைசூடினான். சளுக்கியருடைய சத்துரு பயங்கரன், கரபத்திரன், மூலபத்திரன் என்ற பட்டத்து யானைகளையும்

1. S. I. I., Vol. V, No. 647; Ibid, Vol. III, No. 39.

Ep. Car., Vol. VIII, part II Sb. 325; Ibid, Vol VIII. SK. 118; Bombay Gar., Vol. IV, page 441.

2. S. I. I., Vol. VII, Nos. 885 and 886. Ibid, Vol. V. No. 647; Ep. Car., Vol. X, Mulbagal 107.

3. Ibid, Vol. III, No. 29; Ibid, Vol. V, No. 644.