பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 அறிய இயலவில்லை. எனினும் அவர்களுள் சிலரை ஈண்டுக் குறிப்பிடுதல் ஏற்புடையதேயாம்.

1. மிலாடுடையன் நரசிங்கவர்மன்: இவன், திருக்கோவலூரிலிருந்து கொண்டு மலையமானாட்டை ஆட்சி புரிந்த ஒரு குறுநிலமன்னன். இவன் நம் இராசேந்திரனுக்கு கப்பஞ் செலுத்தி வந்தவன். இவன் ஆட்சிக்காலத்தில்தான் திருகோவலூரிலுள்ள திருமால் கோயில் கருங்கற் கோயிலாக எடுப்பிக்கப் பெற்றது. இவனை 'நரசிங்கவர்மர் என்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்கவர்மர்' என்று திருக்கோவலூர்க் கல்வெட்டு' ஒன்று குறிப்பிடுவது அறியற்பாலது.

2. சேனாபதிகள் ஜயமுரி நாடாழ்வான்: இவன் இராசேந்திர சோழனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன். இவனைப்பற்றிய கல்வெட்டொன்று ஈழநாட்டில் இருத்தலால்’ வன் அந்நாட்டில் போர் நிகழ்த்திய சோழர் படைத் தலைவனாதல் வேண்டும் என்பதும் சில ஆண்டுகள் அங்கு அரசப்பிரதிநிதியாக இருந்திருத்தல் கூடும் என்பதும் நன்கறியப் படும். அரையன் இராசராசனான வீரராசேந்திர ஜயமுரி நாடாழ்வான் என்று கருவூர்க் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற தலைவன் இவனேயாவன்.

3. சேனாபதி அரையன் கடக்கங்கொண்ட சோழன் இராசராச அணிமுரி நாடாழ்வான்: இவன் இராசேந்திர சோழனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன். இவனுடைய ஊர் திருவையாறு என்று தெரிகிறது. இவன் திருமழபாடிக் கோயிலில் பொன்னார் மேனியர் திருவுருவம் ஒன்று செம்பினால் எழுந்தருளுவித்து* அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக நிலம் அளித்துள்ளான். அன்றியும், அதற்குப் பல அணிகலன்களும் கொடுத்துள்ளனன். ஆகவே, இவன் சைவ சமய குரவரிடத்தும் பேரன்புடையவன் என்பது தெள்ளிது.

1. Ep. Ind., Vol. VII, No. 19 K. pp. 145 and 146. 2.S.I.I., Vol. IV, No. 1408.

3.S. I. I., Vol.III, No. 21.

4. Ibid, Vol. V, No. 644.