பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 என்பவனைப் பெரும்படையுடன் வேங்கி நாட்டிற்கனுப்பினான். அதை யுணர்ந்த நம் வீரராசேந்திரன் தன் பாட்டன் இராசராச சோழன் காலமுதல் நெருங்கிய உறவினாற் பிணிக்கப்பட்டிருந்த வேங்கிநாட்டைக் கைவிடாமற் காக்கும் பொருட்டுத் தானும் பெரும்படையுடன் அங்குச்சென்று சாமுண்டராயனுடன் போர்புரிந்து அவனையுங்கொன்றான்' ஆகவே மேலைச் சளுக்கியர் தம் தாயத்தினராகிய கீழைச்சளுக்கியரைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி சிறிதும் பயன்படாமற் போயிற்று. சளுக்கிய தண்டநாயகன் சாமுண்டராயனை வீரராசேந்திரன் வேங்கி நாட்டில் கொன்ற அப்போர் இவன் மேலைச்சளுக்கியரோடு இரண்டாம் முறை நடத்தியதாகும்.

இனி, வீரராசேந்திரனுக்கும் மேலைச்சளுக்கியருக்கும் மூன்றாம் முறை நிகழ்ந்த போர், கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளும் கூடும் இடமாகிய கூடல் சங்கமத்தில் கி.பி.1064-ஆம் ஆண்டில் நடைபெற்றது. வடகடலென்ன வகுத்த அத் தானையைக் கடகளிறொன்றால் கலக்கி' என்று வீரராசேந்திரன் கல்வெட்டு ஒன்று கூறுவதால், கடல்போன்ற பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சாளுக்கியர் இவனோடு போர்புரிய வந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனா கின்றது. எனவே, இரு தரத்தினரும் பெரும் படையுடன் கடும்போர் புரிந்தனர் என்பது ஒருதலை. கூடல் சங்கமத்து நிகழ்ந்த அப் போரில் மேலைச்சளுக்கிய தண்டநாயகர்களாகிய கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரையன், இரேச்சயன் என்போர்

கொல்லப்பட்டனர்.

1. S. I. I., Vol III. pages 34 and 66.

படைத்தலைவனாகிய

2. கூடல் சங்கமம் என்பது துங்கையும் பத்திரையும் கூடும் இடத்திலுள்ள கூடலி என்னும் ஊராக இருத்தல் கூடும் என்பது சிலர் கொள்கை. (சோழ வம்ச சரித்திரம், பக். 25) கிருஷ்ணையும் பஞ்ச கங்கையாறுகளும் கூடும் இடமே கூடல் சங்கமம் என்பது வேறு சிலர் கருத்தாகும்.(Dr. Fleet's Article-Ep. Ind., Vol. XII, p. 298) மறு முறையும் போர்புரிவதற்கு அக்கூடல் சங்கமத்திற்கே வீரராசேந்திரனை ஆகவ மல்லன் அழைத்தபோது இவன் கரந்தை என்னும் ஊரில் படையுடன் ஒரு திங்களுக்கு மேல் அவனை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனன் என்பது இவன் கல்வெட்டால் அறியப்படுகிறது. ஆகவே, அக் கரந்தை என்ற ஊருக்கு அண்மையில்தான் கூடல் சங்கமம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.