பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

கங்கா கேத்தனை யேவ ஆங்கவன்

வந்தடி வணங்கி வாசக முரைத்தலும் சிந்தையு முகமுந் திருப்புய மிரண்டும் ஏந்தெழி லுவகையோ டிருமடங்கு பொலியப் போந்தப் போர்க்களம் புகுந்து கரந்தையில் வல்லவர் கோனை வரவு காணாதவன் சொல்லிய நாளின் மேலுமோர் திங்கள் பார்த்தினி திருந்த பின்னைப் பேர்த்தவன் கால்கெட வோடி மேல்கட லொளித்தலுந் தேவ நாதனுஞ் சித்தியுங் கேசியும் மூவருந் தனித்தனி முதுகிடப் பாவரும் இரட்ட பாடி ஏழரை யிலக்கமும் முரட்டொழி லடக்கி முழங்கெரி மூட்டி வெங்கதப் புலியேறு வியந்து விளையாடத் துங்கபத் திரைகரைச் செயபத் திரத்தூண் நானிலம் பரச நாட்டி மேனாள்

வந்தவப் புரட்டனை வல்லவ னாக்கிக்

கந்தரக் கண்டிகை சூட்டியக் குந்தளத்

தரசனும் மக்களும் ஐம்மடி யஞ்சித்தன் புரசை யானைப் புழைக்கையிற் பிழைத்திவ் வுலகெலா மறிய ஓடிய பரிசொரு பலகையிற் பழுதற எழுதிய பின்னை சார்த்தின வுரையுஞ் சளுக்கி பதமேற்ற பூத்தள மார்வொடு பூட்டிப் பேர்த்துந் தாம்கைக் கொண்ட வேங்கைநன் னாடு

மீட்டுக் கொண்டலான் மீள்கிலங் கேட்டுநீ

வல்ல னாகில் வந்துகாக் கென்று

சொல்லெனச் சொல்லிப் போக்கி எல்லையங்

கடுத்தவத் தரனை எழில்விசய வாடையோ

டடுத்த பேராற்றில் வந்து தடுத்த

சனநா தனையுந் தண்டநா யகனாம்

இனமார் கடக்களிற் றிராசமய் யனையும்

திப்பர சனையு முதலாக வுடைய

அப்பெருஞ் சேனையை யடவியிற் பாய்ச்சிக்

கோதா விரியில்தன் கோதக நீருணக்