பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

நிலவிய படைத் தலைவன்; அரும்பாக்கிழான் எனவும், மணவிற் கூத்தன் எனவும் வழங்கப்பெற்றவன். காலிங்கராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் வரலாறு முன் அதிகாரத்தில் எழுதப் பெற்றுள்ளமையின் எஞ்சியவற்றை ஆண்டுக் காண்க.

(7) செஞ்சியர்கோன் காடவன்

இவன் செஞ்சியின்கண் வாழ்ந்த குறுநில மன்னன்; பல்லவர் குலத்தினன்; விக்கிரம சோழனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் தஞ்சை ஜில்லா ஆலங்குடியில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றில் சில தலைவர்கள் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களுள், செஞ்சி நாங்கொற்றன் ஆடவல்லான் கடம்பன் என்பான் ஒருவனுளன். அவனே, ஒட்டக்கூத்தரால் உலாவில் குறிப்பிடப்பெற்ற செஞ்சியர்கோன் ஆதல் வேண்டு மென்பது ஒருதலை.

(8) வேணாடர் வேந்து

இவன் சேர மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய வேணாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; சேரர் மரபினன். முதற் குலோத்துங்க சோழனுக்குச் சேர மன்னர்கள் திறை செலுத்தி வந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அவன் புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் சேரர் அந்நிலையிலேயே இருந்தனர். அவர் களுள், கூத்தரால் உலாவில் கூறப்பட்ட வேணாடர் வேந்தும் ஒருவனாவன். வேணாடு என்பது திருவாங்கூர் நாட்டின் தென் பகுதியாகும். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் அப் பகுதியிலிருந்து ஆட்சி புரிந்த சேரர் அரசர் சிலர் வேணாட்டடிகள் என்று வழங்கப்பெற்றனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக் கின்றது. எனவே, அவ்வேணாட்டடிகளுள் ஒருவனே விக்கிரம சோழனுலாவில் குறிக்கப்பெற்ற வேணாடர் வேந்தாதல் வேண்டும் விக்கிரம சோழனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் திருவலஞ்சுழி சிவாலயத்திற்கு நிவந்தம் அளித்துள்ள சேரமான் இராமவர்மன்' என்பவன் இவ்வேணாடர் வேந்தாகவும் இருத்தல் கூடும்.

1. Ibid. No. 458.

2. T.A.S., Vol. III, No. 6; Ibid Vol. IV, No.9.

,

3. S.I.I., Vol. VIII. No. 221.