பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

திருமண்டபம்,1 இராச கம்பீரன் திருவீதி* என்பன இவன் பெயரால் இவனது ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்றவை என்று தெரிகிறது.

இராசராசனுடைய மனைவிமார்கள்

‘பூமருவிய பொழிலேழும்' என்று தொடங்கும் இவனது மெய்க்கீர்த்தியினால் இவனுக்கு மனைவியர் நால்வர் இருந்தனர் என்பது நன்கு தெளியப்படும். அன்னோர், புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள், அவனி முழுதுடையாள், தென்னவர் கிழானடி என்போர். அவர்களுள், புவன முழுதுடையாள் என்பவள் பட்டத்தரசியா யிருந்தனள் என்பது கல்வெட்டுக் களாலும் இராசராச னுலாவினாலும் புலனாகின்றது. அவனி முழுதுடையாளுக்கு உலகுடை முக்கோக்கிழானடிகள் என்ற மற்றொரு பெயர் உண்டு என்பதும் அவ்வரசி, திருக்கோவலூரில் அந் நாட்களில் வாழ்ந்து கொண்டிருந்த மலையமானாட்டுச் சிற்றரசன் ஒருவனுடைய மகள் என்பதும் வனது மெய்க் கீர்த்தியால் அறியப்படுகின்றன.

இனி, இராசராசன் காலத்துக் குறுநில மன்னர்களும் அரசியல் தலைவர்களும் யாவர் என்பதை ஆராய்ந்து காண்பாம். 1. மலையமானாட்டுக் குறுநிலமன்னர்கள்:

இவர்களுள் நம் இராசராசன் காலத்தில் இருந்தவர்கள் மலையமான் பெரிய உடையான் நீரேற்றான் ஆன இராசராச மலையகுலராசன்.' மலையமான் அத்திமல்லன் சொக்கப் பெருமாள் ஆன இராச கம்பீர சேதிராயன், கரியபெருமாள் பெரிய நாயனான நரசிங்க மலாடுடையான் என்போர். வர் களுள், இராசராச மலையகுல ராசனைப் பற்றி ஒன்றுந் தெரிய வில்லை. இராச கம்பீர சேதிராயன் என்பவன் மலைய மானாட்டில் கிளியூரிலிருந்து அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை அரசாண்டவன்.4 கரிய பெருமாள் என்பவன் திருக்கோவலூரிலிருந்து 1. இது தாராசுரத்தில் உள்ளது.

2. இது திருப்பனந்தாளிலிருந்த பெருவழியாம்.

3. Ins. 163 of 1906.

4. Ins. 411 of 1909.