பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

சோழப் பல்லவராயர் என்ற பட்டமும் பெற்று உயரிய நிலையிலிருந்துவரும் நாட்களில் இவரது ஒப்பற்ற சிவபத்தியையும் புலமைத் திறத்தையும் கண்ட இம்மன்னர் பிரான் இவரைத் திருத்தொண்டர் புராணம் பாடித் தருமாறு வேண்டிக் கொள்ளவே, இவர் தில்லை மாநகரில் தங்கி அம்பல வாணரது திருவருள் துணைகொண்டு அப் பெருநூலைப் பாடி முடித்து இவ்வேந்தனது அவைக்களத்தில் அதனை அரங்கேற்றிப் பெறற்கரும் புகழெய்தினர்.' இவரது பெருமைக்கேற்றவாறு இவருக்கு இம்மன்னன் பல வரிசைகள் வழங்கித் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் அளித்துப் பாராட்டுவானாயினன். இவ் வரசர் பெருமானைச் சேக்கிழா ரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில் பத்திடங்களில் புகழ்ந்து கூறியிருப்பது அறியற்பாலதாகும். இவ் வடிகள் இரண்டாங் குலோத்துங்க சோழன் விரும்பியவாறு திருத் தொண்டர் புராணம் இயற்றினார் என்பது சில ஆராய்ச்சி யாளரின் கொள்கை. அஃது எவ்வாற் றானும் ஏற்புடைத்தன்று. இரண்டாங் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவைக்களப் புலவராகவும் அவன் ஆட்சிக் காலம் முழுதும் நிலவிய ஒட்டக் கூத்தரையன்றி வேறு எப் புலவரையும் எந்நூலும் இயற்றும்படி அவன் வேண்டிக்கொள்ள மாட்டான் என்பது ஒருதலை. அன்றியும், இரண்டாங் குலோத்துங்கனுக்குப் பிறகு அவன் புதல்வன் இரண்ட டம் இராசராசன் ஆட்சிக் காலத்தும் உயிர் வாழ்ந்திருந்து இராசராசன் உலாவும் தக்கயாகப் பரணியும் இயற்றியவரும் தம் நூல்களில் றையனாரகப்பொருள், களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி ஆகிய தொன்னூல்களை மனமாரப் பாராட்டும் இயல்புடையவரும் சிவபத்திச் செல்வம் வாய்ந்தவரும் ஆகிய ஒட்டக்கூத்தர், தம் காலத்தில் திருத் தொண்டர் புராணம்

1. பெரியபுராணம், பாயி. 8.

2

2. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், பா. 2.

3. மேற்படி பா. 103.

விக்கிரம சோழ னுலா, கண்ணி, 14.

குலோத்துங்க சோழ னுலா, கண்ணி, 20.

இராசராச சோழ னுலா, கண்ணி. 18.

4. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், பா, 14.

3