பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 24ஆம் ஆண்டுகளில் மழையின்மையால் நாடெங்கும் பெரும் பஞ்சம் தோன்றி மக்கட்கு இன்னல் இழைத்த செய்தி, திருவண்ணாமலை, திருப்பாம்புரம் என்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களால்' நன்கு புலனாகின்றது. அப் பஞ்சத்தில் காசுக்கு முந்நாழி நெல் விற்றதென்றும் வேளாளன் ஒருவன் தன் மகளிர் இருவருடன் 110 காசுக்குக் கோயில் மடத்திற்குத் தன்னை விற்றுக் கொண்டு அடிமையாயினன் என்றும் திருப்பாம் புரத்திலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. இத்தகைய பஞ்ச நிகழ்ச்சிகளில் செல்வராயுள்ளவர்கள், ஆற்றிற்குக் கரை போட்டும் ஏரி அமைத்தும் காடு வெட்டியும் கழனி திருத்தியும் அவற்றிற்குக் கூலியாகக் குடிமக்கட்குப் பொன்னும் நெல்லும் அளித்து அன்னோரைக் காப்பாற்றி வந்தமை அறியற் பாலதாம்.

இவனது ஆட்சியின் 22-ஆம் ஆண்டில் குகையிடி கலகம் ஒன்று நிகழ்ந்ததென்றும் அந்நாட்களில் சைவத் துறவிகளின் மடங்களாகிய பல குகைகள் அழிக்கப்பெற்றன என்றும் அங்ஙனம் அழிக்கப்பட்டவற்றுள், திருத்தருப்பூண்டியிலிருந்த குகை ஒன்று என்றும் மூன்றாம் இராசராசன் (ஆட்சியின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று' கூறுகின்றது.) இக் குகையிடி கலகம், சோழ மன்னர்க்குக் குருமார்களாக நிலவியவர் களும், கோளகி மடம், பிட்சாவிருத்தி மடம் முதலான சைவா தீனங்கட்குத் தலைவர்களாயிருந்தவர்களும் ஆகிய வடநாட்டுப் பிராமணர்கள் விரதம், சீலம், ஞானம் ஆகியவற்றில் சிறந்த தென்னாட்டுச் சைவத் துறவிகளின் செல்வாக்கையும் மேம் பாட்டையும் குறைப்பதற்கு உண்டு பண்ணியது என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். எனினும், நம் குலோத்துங்கனுக்குப் பிறகு பட்டம் பெற்ற மூன்றாம் இராசராசன் ஆட்சியில் சைவத்

3

1. S.I.I., Vol. VIII, No. 151. "திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 204வது அருங்குன்றங்கிழான் நாற்பத்தெண்ணாயிரம் பிள்ளையும் மங்கையர்க்கரசியாரும் இருபத்துநாலாவது பஞ்சத்திலே காசுக்கு உழக்கு அரிசி விற்கச்சே பூண்ட பொன்னும் தேடின அர்த்தமும் நெல்லும் அடையயிட்டு திருநதியைக் கட்டி ஏரி காண்கையாலும்" (திருவண்ணாமலைக் கல்வெட்டு.)

(திருப்பாம்புரம்). Ins. 86 of 1911.

2. Ins. 471 of 1912.

3. Annual Report on Epigraphy, Southren Circle for 1913 part II, para 42.