பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

அந்நூற்பாயிரம் இவனை 'அருங்கலை விநோதன் அமராபரணன்’ என்று பாராட்டுவது குறிப்பிடத் தக்கது.

இனி, திருவண்ணாமலைக் கோயிலுக்கு நிவந்தம் வழங்கி யுள்ள பங்கள நாட்டுப் பிருதிகங்கன் அழகிய சோழனும்' அகஸ்திய கொண்டாவில் திருநாவுக்கரசு அடிகளை எழுந்தருளு வித்த அரசியின் கணவனாகிய உத்தம சோழங்கனும் நம் குலோத்துங்கன் காலத்திலிருந்த கங்கர் குலச் சிற்றரசர்கள் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.2

6. அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானாகிய கண்டர் சூரியன் சம்புவராயன்:

இவன் பல்லவர் மரபில் செங்கேணிக் குடியில் தோன்றியவன்; இராசாதிராசன் ஆட்சியின் பிற்பகுதியிலும் குலோத்துங்கன் ஆட்சியின் முற் பகுதியிலும் நிலவிய ஒரு படைத்தலைவன். கி. பி. 1170-ல் இவன் பாண்டி நாடு கொண்டான் என்ற சிறப்புப் பெயருடன் கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டிருத்தலால் இராசாதி ராசன் ஆட்சியில் நிகழ்ந்த பாண்டி நாட்டுப் போர் கட்குச் சென்ற படைத் தலைவர்களுள் இவனும் ஒருவனாதல் வேண்டும் என்பது திண்ணம். இவன் திருவக்கரையிலுள்ள சிவன் கோயிலில் சூரியன் திருக்கோபுரம் என்ற கோபுரமும் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபமும் எடுப்பித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.

இனி அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரம சோழச் சம்புவராயன்,' சீயமங்கலத்திலுள்ள கோயிலுக்கு இறையிலி நிலம் வழங்கியுள்ள குலோத்துங்க சோழச் சம்புவராயன்; திருவோத்தூர் இறைவர்க்குத் தேவ தானமாக நிலம் அளித்துள்ள செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி

1. Ibid. Vol. IV, No. 643.

2. Ins. 559 of 1906.

3. Ins. 195 of 1904.

4. Ins. 190 of 1904.

5. Ins. 620 of 1919.

6.S.I.I.,Vol. VII, No. 66.