பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

179

அழகிய சீயன், அவனி யாளப் பிறந்தான், காடவன், கோப்பெருஞ் சிங்கன் என்ற வேறு பெயர்களும் உண்டு. கோப்பெருஞ்சிங்கன் என்னும் பெயர் இவன் புதல்வனுக்கும் அக்காலத்தில் வழங்கி யிருத்தலால் இவனை முதற் கோப்பெருஞ் சிங்கன்என்று வரலாற்றாராய்ச்சி யாளர்கள் கூறுவர். குலோத்துங்கனுடைய மகளை மணந்து இவ்வேந்தனது அன்பிற்குரியவனாய்ப் பெருமையுடன் வாழ்ந்து வந்த இப்பல்லவர் தலைவனே பிற்காலத்தில் சோழ இராச்சி யத்தின் அழிவிற்கு வழி தேடியவன் ஆவன்.' இவன் நன்றி மறந்து, தன்னலங் கருதிச் செய்த அடாத செயல்களே, கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் சோழராச்சியத்தில் அமைதி யின்மையையும் ஆட்சியில் தளர்ச்சியையும் உண்டு பண்ணி விட்டமையோடு இறுதியில் பேரரசு வீழ்ச்சி எய்தி மறைந் தொழியுமாறும் செய்துவிட்டன என்பது ஒருதலை. அந்நிகழ்ச்சிகள் எல்லாம் அடுத்த அதிகாரத்தில் நன்கு விளக்கப்படும்.

இனி,கி.பி.1187-ல் குலோத்துங்க சோழன் நியாய பரிபாலன சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் அமைத்தவனும் சிதம்பரத்திற் கண்மையில் பரகேசரி நல்லூரில் விக்கிர சோழேச்சுரம் என்ற ஆலயம் எடுப்பித்தவனுமாகிய சேந்தமங்கலமுடையான் அரையன் எதிரிலி சோழனும்,* செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருக்கச்சூர், கடப்பேரி, திருமழிசை என்னும் ஊர்களில் கோயில் களுக்கு நிவந்தம் வழங்கியுள்ள குலோத்துங்க சோழ கண்ணப்பன் பஞ்சந்தி வாணனாகிய இராசராச நீலகங் கரையனும், கி. பி. 1183- ல் திட்டக்குடியில் திருமால் கோயிலுக்கு 5-வேலி நிலம் இறையிலியாக அளித்தவனும் அந்நிலப் பரப்பில் பாடிகாவல் அதிகாரியாக நிலவியவனுமாகிய இராசராச வங்கார முத்தரையனும், புதுக்கோட்டை நாட்டில் சில கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ள திருக்கொடுங்குன்ற முடையான் கேரள

4

1. Ibid, Vol. VIII, No. 350. இவன் குலோத்துங்கன் ஆட்சியின் பிற்பகுதியில் முரண் பட்டுவிட்டமை ஒரு கல்வெட்டால் நன்கு புலனாகின்றது. (S.I.I., Vol. VIII, No. 106)

2. Ins. 393 of 1907; Ins 309 of 1913.

3. Ins. 275 of 1909; S.I.I., Vol. V. No. 966; Ins. 2 of 1911.

4. S.I.I., Vol. VIII, No. 298. Ibid, No. 288.