பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

நாட்டுச் சிற்றரசனாகிய வாணகோவரையனுடைய புதல்வியா யிருத்தல் வேண்டும் என்பதும் இயற்றமிழ் இசைத் தமிழ்களில் பயிற்சி பெற்று அவற்றை வளர்த்தலில் பெரிதும் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்பதும் தெள்ளிதிற் புலப்படுகின்றன. போசள மன்னன் வீரநரசிம்மனுடைய மகளையும் நம் இராசராசன் மணந்திருந்தான் என்று தெரிகிறது. அவ்வரசியைப் பற்றிய செய்திகளை இப்போது அறிய இயல வில்லை. இராச ராசனுக்குப் பிறகு அரசாண்ட மூன்றாம் இராசேந்திர சோழன், இவ்வரசனுடைய புதல்வன் என்பதில் ஐயமில்லை. இதுகாறும் எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இதற்குரிய ஆதாரம் கிடைத்திலது.

ராசராசனது இறுதிக்காலம்

இவனது ஆட்சியின் 41-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள்' கிடைக்காமையால் இவன் கி. பி. 1256-ல் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்குப் பத்து ஆண்டுகட்டு முன்னரே கி. பி. 1246-ல்* தன் புதல்வன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, அதுமுதல் அவ் விளவரசனே நாட்டை ஆண்டு வருமாறு செய்துவிட்டனன். அவன் பேராற்றல் படைத்த பெரு வீரனாதலின், பல அல்லல்களுக்குட்பட்டுத் தளர்ந்த நிலையிலிருந்த இராச ராசன் சோழ இராச்சியத்தைத் தன் புதல்வனாகிய அவன்பால் ஒப்புவித்துவிட்டுத் தான் ஓய்வு பெற்றிருந்தனனாதல் வேண்டும். கி.பி. 1246-க்குப் பிறகு இராசராசன் கல்வெட்டுக்கள் மிக அருகியும் இராசேந்திரன் கல்வெட்டுக்கள் மிகுந்தும் காணப்படுவதற்குக் காரணம் இதுவே யாதல் வேண்டும். குறுநில மன்னர்களும் தலைவர்களும்

இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியில் பல்லவர் குலத் தலைவனாகிய முதற் கோப்பெருஞ்சிங்கனும் மகத நாட்டு

1.

இவ் வரசியைப்போல் முதற் குலோத்துங்க சோழன் மனைவி ஏழிசைவல்லபி என்பாள், இசைப் புலமை எய்தி அதனை வளர்த்து வந்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

2. Ins.199 of 1921.

3. Ep. Ind. Vol. VIII, p. 7.