பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 கீர்த்தி கூறுகின்றது. அதில் குறிப்பிடப்பெற்ற வட இலங்கை தெற்கேயுள்ள சிங்கள நாடன்று என்பது திண்ணம். அன்றியும், அது கோதாவரியாற்றின் கழிமுகத்திலுள்ள இலங்கையுமாகாது.' எனவே, அது நம் தமிழ் நாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்றாதல் வேண்டும். கடைச் சங்க காலத்திலிருந்த சிற்றரசருள் ஒருவனாகிய ஓய் மானாட்டு நல்லியக்கோடன் என்பவன் இலங்கை என்னும் நகரின் தலைவன் என்று சிறுபாணாற்றுப் படையும் புறநானூற்றிலுள்ள 176ஆம் பாடலும் உணர்த்து கின்றன.' அம்மாவிலங்கை தொண்டை மண்டலத்திலுள்ளதோர் ஊராகும். அங்கிருந்து கொண்டு அம்மண்டலத்தின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்த குறுநில மன்னனாகிய சம்பு வராயனை நம் இராஜேந்திரன் போரில் வென்ற செய்தியைத் தான் இவனது கல்வெட்டு அவ்வாறு புகழ்ந்துள்ளது என்க. சம்புவராயருள் சிலர் தம்மை வீரராட்சசன் என்று கூறிக் கொண்டிருத்தலும் அதனை வலியுறுத்தா நிற்கும். திக்க நிருபதி, காஞ்சிமா நகரின் ஆட்சி யுரிமையைப் பெறு வதற்குமுன் சம்புவராயன் சேதிராயன் முதலானோர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றனன் என்று திக்கந சோமயாஜி என்பார் தம் தெலுங்கு இராமாயணத்தில் கூறியிருப்பதால், சம்புவராயனோடு இராசேந்திரன் நிகழ்த்திய போரில் கண்ட கோபாலனும் படையுடன் வந்து இவனுக்கு உதவி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

3

இனி, இராசேந்திரன் நடத்திய போர்கள் எல்லாம் எவ் வெவ்வாண்டில் நிகழ்ந்தன என்பது தெளிவாகப் புலப்பட வில்லை. எனினும், அவையனைத்தும் கி. பி. 1253ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இராசேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியத்தைத் தன் முன்னோர் காலத்திலிருந்ததுபோல உயர்நிலைக்குக் கொண்டுவர முயன்று அதில் சிறந்த வெற்றியும்

1. Annual Report on Epigraphy for 1912, part II, para 32; for 1913, part II, para 43.

2. சிறுபாணாற்றுப்படை, வரிகள் 119-126.

3. Ins. 58 of 1908.