பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

209

பெற்றனன் என்பதில் ஐயமில்லை. ஆயினும், ஆகூழின்மையால் இவனது ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் மீண்டும் தன் உயர்நிலையை யிழந்து வீழ்ச்சி எய்துவதாயிற்று. போசள மன்னர்கள் மீண்டும் இராசேந்திரனோடு நட்புக் கொண்டமை

பாண்டி நாட்டில் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாணடியனுக்குப் பிறகு முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் கி. பி. 1251-ல் அரியணை ஏறினான். அவன் இயல்பாகவே பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன்; பிற்காலப் பாண்டியருள் ஈடும் எடும்புமற்றவன். அவனைக் கண்டு பெரிதும் அஞ்சிய வீரசோமேசுவரன், தான் பகைமை கொண்டு முன்னே தீங்கிழைத்த இராசேந்திரனோடு நட்புக் கொள்ளத் தொடங்கினான். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள சிவாயம்' மகா தானபுரம்' திருவானைக்கா' என்ற ஊர்களிலும் திருவண்ணா மலையிலும்' காணப்படும் சில கல்வெட்டுக்கள், கி. பி. 1251-ம் ஆண்டில் அவ்விருவரும் நண்பராயிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துவன ஆகும். திருச்சோற்றுத்துறை யிலுள்ள ரு கல்வெட்டுக்கள்' அந்நட்புரிமை வீரசோமேசு வரனுடைய மகன் வீரராமநாதன் காலத்தும் நிலைபெற்று இருந்தது என்பதை நன்கு புலப்படுத்துகின்றன. அன்றியும், திருச்சிராப்பள்ளி ஜில்லா விலுள்ள அன்பில் கண்டராதித்தம்' நத்தமாங்குடி ஆகிய ஊர்களிலுள்ள சில கல்வெட்டுக்கள் அவ்வூர்களைத் தன்னகத்துக் கொண்ட நிலப்பரப்பு அவ்வீர ராமனாதன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்றுணர்த்துகின்றன. திருவரங்கத்திற்கு வடக்கே யுள்ள கண்ணனூரே அவனுக்குத் தலைநகராக விளங்கியது. அவனது ஆட்சியும் கி. பி. 1255 ஆம்

8

1. Ins.49 of 1913.

2. S.I.I., Vol. VIII, No. 703.

3. Ins. 73 of 1937-38.

4. S.I.I., Vol. VIII, No. 88.

5. Ins.207 and 208 of 1931.

6. S.I.I., Vol. VIII, No. 194.

7. Ins.203 of 1928 - 29.

8. Ins. 150 and 152 of 1928-29.