பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத் திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப் புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய கோவி ராசகேசரி வன்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு-

3. புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற் பொன்னேமி யளவுந் தன்னேமி நடப்ப விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச் சக்கரக் கோட்டத்து விக்கிரமத் தொழிலாற் புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம் வயிரா கரத்து வாரி யயிர்முனைக் கொந்தள வரசர் தந்தள மிரிய

வாளுறை கழித்துத் தோன்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி

வடதிசை வாகை சூடித் தென்றிசை தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவையின்

தனிமையுந் தவிரப் புனிதத்

திருமணி மகுட முரிமையிற் சூடித்

தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்

தொன்னில் வேந்தர் சூட முன்னை

மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்

செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை

இருநில வளாக மெங்கணுந் தனாது

திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி

மேருவிற் புலிவிளை யாட வார்கடற்

றீவாந் தரத்துப் பூபாலர் திறைவிடு

கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய

தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன்

பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்நாட்