பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

குறுகலர் குலையக் கோட்டா றுட்பட

நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்

வீரசிம் மாசனந் திரியவிட் டருளி

வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்

கலிங்க மேழுங் கனலெரி பரப்ப

விலங்கல் போல விளங்கிய வேந்தர்

விட்டவெங் களிற்றோடு பட்டுமுன் புரளப்

பொருகோ பத்தொடு போர்முக மதிர

வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட

எங்க ராய னிகலவ ரேச்சணன் மாப்பிறளா மதகரி யிராசணன்

தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி

மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன் போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி

என்றிவ ரனைவரும்

வெற்றிவே ழத்தொடு பட்டு மற்றவர்

கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு பருந்தலைத் தெங்கணும் பரப்ப வுயர்த்துக் கருங்கட லடையத் தராதலந் திறந்து கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல் ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல வீரமுந் தியாகமும் விளங்கப் பார்தொழச் சிவனிடத் துமையெனத் தியாகவல்லி உலக முடையா ளிருப்ப வவளுடன் கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலகம் ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள் வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந் திருமா லாகத்துப் பிரியா தென்றும்

திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து

வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான

திரிபுவன சக்கர வர்த்திகள்

ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு-