பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

இகன்மதமால் யானை யனபாய னெங்கோன் முகமதியின் மூர னிலவால்-நகமலர்வ செங்கயற்க ணல்லார் திருமருவு வாள்வதன பங்கயங்கள் சாலப் பல.

மூவாத் தமிழ்பயந்த முன்னூன் முனிவாழி ஆவாழி வாழி யருமறையோர்-காவிரிநாட் டண்ண லனபாயன் வாழி யவன் குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை.

93

94

வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து மண்குளிரச் சாயல் வளர்க்குமாந் -தண்கவிகைக் கொங்கா ரலங்கலன பாயன் குளிர்பொழில்சூழ் கங்கா புரமாளிகை கை.

95

நானே யினிச்சொல்லி வேண்டுவ தில்லை நளினமலர்த் தேனே கபாடந் திறந்து விடாய்செம்பொன் மாரிபொழி மானே ரபய னிரவி குலோத்துங்கன் வாசல்வந்தால்

96

தானே திறக்குநின் கைம்மல ராகிய தாமரையே.

ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்

97

நீடுங் குடையிற் றரித்த பிரானென்று நித்தநவம்

பாடுங் கவிப்பெரு மானொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்

சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே.

நீடிய வேண்டிசை நீழல்வாய்ப்ப

98

நேரிய தெக்கிண மேருவென்னப்

பீடிகை தில்லை வனத்தமைத்த

பெரிய பெருமாளை வாழ்த்தினவே.

93.மேற்படி, 63 மேற்கோள்.

94. மேற்படி, 88 மேற்கோள்.

95. மேற்படி, 98 மேற்கோள்.

96. தமிழ் நாவலர் சரிதை பா. 143

97. தமிழ் நாவலர் சரிதை பா131

98. தக்கயாகப் பரணி, பா, 773

255