பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 மருதூரில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று' ‘சுங்க மில்லாச் சோழநாடு' என்று கூறுவதால் நம் குலோத்துங்கன் சோழ நாட்டில் மாத்திரம் சுங்கத்தை நீக்கியிருந்தானென்பதும் இவனுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த சோழ மன்னர்களின் காலத்தும் அந்நாட்டில் சுங்கம் வாங்கப்படவில்லை என்பதும் நன்கு புலனாகின்றன.

சுங்கமில்லா நாட்டில் புறநாட்டுப் பொருள்களெல்லாம் வாணிகத்தின் பொருட்டு மிகுதியாக வந்து குவியுமாதலின், அவையனைத்தும் சொற்ப விலைக்கு அந்நாட்டில் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் என்பது ஒருதலை.

குலோத்துங்கன் ஆட்சியில் நிலம் அளக்கப் பெற்றமை

இனி, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி, இவன் சோழ நாடு முழுவதையும் அளக்கும்படி செய்து விளை நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்து நிலவரியை ஒழுங்கு படுத்தியமையே யாகும், அவ்வேலையும் கி. பி. 1086 -ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று இரண்டாண்டுகளில் முடிவெய்தியது இவ்வேந்தன் ஆணையின் படி அதனைச் செய்து முடித்த அரசியல் அதிகாரிகள் திருவேகம்ப முடையானான உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தானான திருவரங்க தேவன் என்போர்'. அவர்கள் சோழ மண்டலத்திலுள்ள நிலம் முழுமையும் அளந்தமை பற்றி அன்னோர்க்கு உலகளந்த சோழப் பல்ல வரையன் உலகளந்தான் என்னும் பட்டங்கள் அரசனால் அளிக்கப்பெற்றிருப்பது அறியற்பாலதாம். குலோத்துங்கனுடைய தாய்ப் பாட்டன் கங்கை கொண்ட சோழனின் தந்தையாகிய முதல் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தும் சோழமண்டலம் ஒரு முறை அளக்கப் பெற்றது என்பது முன்னர் விளக்கப்

1. The Colas, Vol. II, page 51 Foot Note.

2. S.I.I., Vol. V, No. 990. 'நம் உடையார் சுங்கந் தவிர்த்தருளின குலோத்துங்க சோழதேவர்க்கு 16-ஆவது திருவுலகளந்த கணக்குப்படி நீங்கல் நீக்கி' - S.I.I., Vol. VI, No.34. 'சுங்கந் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவர்க்குப் பதினாறாவது அளக்கக் குறைந்த நிலம்’

3. Ins. 132 of 1930; Ins. 340 of 1917.