பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

27

முள்ள தொடர்பை அவ்வாசிரியர் எடுத்துரைத்திருப்பது நினைவில் வைத்தற்குரியது.

பிறகு, இம்முனிவர் பெருமான் பாண்டிநாடு சென்று பாண்டி வேந்தர்க்குக் குலகுருவாக அமர்ந்தனர். இச்செய்தி கி.பி. பத்தாம் நூற்றாண்டில் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் வரையப் பெற்ற சின்னமனூர்ச் செப்பேடுகளின் வட மொழிப் பகுதியில் ‘அகஸ்த்ய சிஷ்ய:' என்றும், தமிழ்ப் பகுதியில் 'பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது' என்றும் குறிக்கப் பட்டுள்ளவற்றால் நன்கு வெளியா கின்றது.

இறையனார் அகப்பொருளுரையில் மேற் கோளாகக் காட்டப் பெற்ற பாண்டிக் கோவைப் பாடல் ஒன்று, உசிதன் என்ற பாண்டி வேந்தன் ஒருவன் அகத்தியர்பால் தமிழிலக்கணம் கேட்டனன் என்று உணர்த்துகினற்து. இதனை,

அரைதரு மேகலை யன்னமன்னாயன் றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ் கேட்டோ னுசிதன்'

என்னும் பாடற்பகுதியால் அறியலாம்.

இனி, வீரபாண்டியன் கல்வெட்டொன்று, பாண்டி மன்னன் ஒருவன் 'திடவாசகக் குறுமுனிபாற் செந்தமிழ் நூல் தெரிந் தருளினான்' என்று கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும் காளிதாசர் என்ற மாபெருங் கவிஞர், அகத்தியருடைய சிஷ்யன் பாண்டியன் எனத் தம் இரகுவமிசத்தில் கூறியுள்ளார் என்று தெரிகிறது.

இவற்றால் அகத்தியர்க்கும் பாண்டியர்க்குமுள்ள தொடர் பினைத் தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கல்வெட்டுக் களும் செப்பேடுகளும் நன்கு விளக்கி நிற்றல் காண்க.

இனி, இம்முனிவர்பிரான் தலைச்சங்கப் புலவருள் ஒருவராய மர்ந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று இறையனாரகப் பொருளுரை அறிவிக்கின்றது. அவ்வுரையிற் காணப்படும் தலைச் சங்க வரலாறு, தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயனார் பாண்டியர்கள். அவருள்,