பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

இருந்தனர் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இவர் சித்தர் கூட்டத்திற்குத் தலைவராக இருந்தனர் என்றும் தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் சித்தர் மருத்துவமும் சோதிடக் கலையும் இம்முனிவராலும் இவரது மாணவராலும் யாண்டும் பரவி வளர்ச்சி யெய்தி வந்தமை குறிப்பிடத் தக்கதொரு நிகழ்ச்சியாகும்.

6. அகத்தியனாரது சமயக் கொள்கை

இம் முனிவர்பிரான் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபாடு புரிந்துள்ளமைக்கு நம் தமிழகத்தில் எத்துணையோ ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிவபெருமானிடத்தும் முருகவேள்பாலும் இவர் தமிழ் இலக்கணம் கற்றனர் என்று தொன்னூல்கள் கூறுஞ் செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. தன்பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் திருமால் வடிவத்தைச் சிவலிங்கமாக்கி இவர் வழிபட்டனர் என்பது பண்டைநாள் முதல் வழங்கிவரும் ஒரு வரலாறு ஆகும். இச்செயலால் இவரது சிவபக்தியின் மாண்பு எத்தகையது என்பது இனிது புலப்படுதல் காண்க. வேதாரண்யம் என்று வழங்கும் திருமறைக்காட்டிற்கு அண்மையில் அகத்தியான் பள்ளி என்னும் சிவஸ்தலம் ஒன்றுளது. அது, சைவசமயகுரவ ராகிய திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற பெருமையுடைய தாகும். திருமறைக்காட்டில் சிவபெருமானது திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்த அகத்தியனார் தங்கியிருந்த

டமாதல் பற்றி அத்திருப்பதி அகத்தியான்பள்ளி என்ற பெயர் பெற்றது என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அங்கு அகத்தியர் திருவுருவமும் இருத்தல் அறியத் தக்கது. பொதியின்மலையிலும் சிவபெருமானது திருமணக் கோலத்தை ஒருமுறை இவர் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப பொதியின் மலையிலும் அகத்தியாச்சிரமம் என்ற பெயருடன் ஒரு கோயிலும் உளது. தமிழ் நாட்டில் பல சிவன் கோயில்களில் அகத்தியர் வந்து வழிபட்ட வரலாறுகள் ஆங்காங்குக் கூறப்படுகின்றன. அவ்விடங் களில் அகத்தியர் திருவுருவங்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சிமாநகரில் பல்லவமன்னனாகிய இரண்டாம் நரசிம்ம வர்மனால் எடுப்பிக்கப் பெற்ற கைலாயநாதர் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள