பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


தொண்டைமானாரவர்கள்.[1] திருப்பெருந்துறையாவுடைய பரமசுவாமியார்க்கு உஷாகால பூசைக்குப் பரதேசி முத்திரை அம்பலத்தாடு பண்டாரம் பாரிச மாகநடக்கிற தனது அபிஷேகக் கட்டளைக் கிராமங்களுக் கெல்லாம் சருவமான்னியமாக தருமசாசன பட்டயம் கொடுத்தபடி கிராமங்களாவது கல்லிங்க நாடு, பைங்கானாடு தானவனாட்டில் காலகம் உள்ளூர் உக்கடை பழநகரம்படி வெள்ளாற்று நாட்டில் சிறுவயல், ஈச்சுங்குடி, காரணிநாடு, ஆலையேம் பல், ஒ(த) ய மாணிக்கம், மானநல்லூர், களக்குடி, எய்யமங்கலம், பெருங்காடு, விளங்குளம்வட்டத்து அஞ்சில் ரெண்டு சீமையில் முலவயல் திருமழலைநாட்டு வெள்ளாம் பற்றில் புண்ணிய வயல், எழுநூற்றுமங்கலம், உலகந்தனியேந்தல், இரையாமங்கலம், தவசியார் பட்டமங்கை, சித்திரலிடங்கம், மங்கலம், கொனப்பன்வயல், கீழகாரை, காட்டுக்குடி, இரும் பானாடு, தொமொகி நாட்டுப் பற்றில் மதகம் தாணிக்காடு தில்லைவயல் செய்யிவயல் திருவாகுடி இதுமுதலாக அபிஷேக கட்டளைக்கு நடக்கிற கிராமங்கள் ஏந்தல் உள்கிடைக் கெல்லாம் இரைவரிமுதலாக ஊழியமுள் பட சகலமும் வேண்டா மென்று சருவமானியமாக கட்டளை யிட்டோம், ஆனபடியினாலே யியாக அபிஷேகக் கட்டளைக்கு மான்னியமாக அனுபவிச்சுக் கொள்ளக் கடவதாகவும், நம்மைச் சார்ந்த மனுஷர் மக்களெல்லாம் இந்த தர்ம சாதனப் பட்டயப்


  1. இவன் கடைச்சங்கநாளில் கச்சிநகரத்திருந்து ஆட்சிபுரிந்து தொண்டைமான் இளந்திரையன் வழித்தோன்றினோனாவன். இப்பகுதியினர் சோழர் வழித்தோன்றி நாடாட்சி தனியேயளிக்கப் பெற்றோராவர். இதனை நன்கு விளக்கக்கூடிய பழஞ்சரித மொன்றுளது. அதாவது நாகப்பட்டினத்துச் சோழனொருவன் நாகலோகஞ் சென்று ஓர் நாககன்னியைப்புணர, அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வே னென்றபோது தொண்டைக் கொடியை யடையாளமாகக்கட்டிக் கடலில்விட (டு) அவன் வந்து கரையேறின் அவனுக்கு யான் அரசுரிமையும் நாடாட்சியும் நல்குவேனென்று அச்சோழன் கூற அவளும் தன் புதல்வனை அங்ஙனம் வரவிட, அவனைத் திரை கொணர்ந்தமையால் அவனும் அவன் வழித் தோன்றினோரும் திரையன் திரையர் எனப் பெயர் பெற்றதோடு அவன் வழியினரெல்லாம் தொண்டைமேசூடிப் போந்தகாரணத் தால் தொண்டை மான்கள் எனவும் வழங்கப் பட்டரென்பதேயாம். இவ்விஷயம் மேற்கூறிய தொண்டைமான் இளந்திரையன்மீது கடியலூருத்திரங்கண்ணனார் பாடியுள்ள பெரும்பாணாற்றுப் படையானும் அதற்கு நச்சினார்க்கினியர் கூறிய வுரையானும் நன்கு தெளியப்படும். இனி, தொண்டைமான்கள் ஆட்சி புரிந்த நாடும் தொண்டைநாடென வழங்கப் பெற்றது போலும். இச்சாசனத்தில் சொல்லப்படும் அருணாசல வணங்காமுடித் தொண்டைமானது வம்சத்தினர், தஞ்சை ஜில்லா பட்டுக்கோட்டைத்தாலூகாவில், இக்காலத்துமிருக்கிறதாகச் சிலர் கூறுகின்றனர்.