பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

95


நெடிது யரூழியு ளிடைதுறை நாடுந்
தொடர் வனவேலிப் படர்வன வாசியுஞ்
சுள்ளிச் சூழ்மதிட் கொள்ளிப் பாக்கமு
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட வீழத் தரைசர்த முடியு
மாங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர்பக்கல் தென்னவர்வைத்த
சுந்தர முடியு மிந்திர னாரமும்
தென்றிசை ஈழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடுங்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுஞ் சங்கதிர் வேலைத்
தொல் பெருங்காவற் பல்பழந் தீவும்
செருவிற் கினவி இருபத் தொருகால்
அரைசுகளை கட்ட பரசு ராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும்
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்டப் பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமு
முதிர்பட வல்ல மதுரை மண்டலமும்
காமிடை வள நாமனைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுனி தேசமும்
அயல்வில் வண்கீர்த்தி ஆதிநக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர திலதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷையமு
பூசரர் சேர்நற் கோசலை நாடும்
தந்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணுறத் தாக்கித்