பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

97


உழக்குக்கும் வெளாநாட்டு நெற்குப்பை உடையார் வண்காடன் குடிதாங்கி தேவர் பண்டாரத்து வைத்த காசைம்பது இக்காசைம்பதும் இத்தேவர் தேவதானம் பிரம்பில் விரையாக்கலிப் பெருந்தெருவிற் சங்கரப்பாடியோம் இத்தேவர் கன்மிகள் வசங்கொண்ட காசைம்பது இக்காசைம்பதுங் கொண்டு நிசதம் உழக்கெண்ணெய் சந்திராதித்தவல் அட்டகட வோம் விரையாக்கலிப் பெருந்திருவிற் சங்கரப் பாடியோம்....

3. குலோத்துங்க சோழன் காலத்தியது

(1) ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு.......

(2) வடகரை விக்கிர சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவ (3) தானம் திருப்புறம்பியத்து உடையார் திருப்புறம்பியமுடையார் கோயில் அமுதுபடியாக புகுநா (4) அமுது செய்தருளுவது பூரியாதலால் இப்படியாக.... இத்தேவற்கு ஆறாவது ஆயிரத்தளியா (5) னமீனவன் மென் கண்ட சோழபுரத்தெழுந்.... கும்பிட்ட நக்கன் (6) ஆட்கொண்ட நாயகன் விண்ணப்பஞ் செய்து உடை யார் திருப்புறம்பிய முடையாரும் ஆளுடைய நாச்சியாரும் (7) சென்னெல் அமுது செய்தருளப்பண்ணி அமுது செய்து வருகையால் பின்பு உள்ளு.... எழுந்தருளியிருக்குந் தேவர்க (8) ள் அமுது செய்வது... பூரியே சந்திராதித்தவல் அமுது செய்தருளப் பண் (9) ணவே ணுமென்று திருப்புறம்பியத்தில் வெள்ளாள ரையும் குலோத்துங்க (10) சோழ மங்கலத்து காணியாளரையும் வெள்ளாளரையும் மற்றும் புறம்புள்ள தேவதான (11)த்துக் காணியாளரையும் வேண்டிக் கொள்ள இப்படி இவர்கள் சம்மதித்து இந்நெல்லு (12) அளக்க இசைந்திட்டு இட்டமையில் சென்னெல்லும் வெள்ளையுமல்லதுபூரி (13) அமுது செய்விப்பார் திருவாணை திருவிரையாக்கலி - இது பன்மா சேஸீவரரக்ஷை.

விடேல் விடுகு

காஞ்சிமாநகரைத் தலைநகராக் கொண்டு தொண்டை மண்டலத்தையும் சோழமண்டலத்தையும் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களுள் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்