பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


முதல் 779 முடிய நம் தமிழகத்திற் பெரும் பகுதியை ஆட்சி புரிந்த பல்லவ அரசன் ஆவான். இவனது பேரனே நந்திக் கலம்பகம் கொண்டவனும் பாரத வெண்பாவைப் பாடு வித்தவனும் தெள்ளாறு எறிந்தவனும் ஆகிய நந்திவர்மன் என்பவன். ஆகவே, நந்திக்கலம்பகத்திலும் கல்வெட்டுக்களிலும் பயின்றுவரும் விடேல்விடுகு என்னும் தொடர்மொழி முற்காலத்தில் பல்லவ அரசர்களது ஆணையைக் குறித்தமை நன்கு புலப்படுத்தல் காண்க.