பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


புலப்படுகின்றது. இதனைப் போலவே, தஞ்சாவூர்த் தாலுக்காவிலுள்ள ஆற்காடு என்னும் ஊர் பழையநாளில் பேராற்காடு எனவும் சீநக்க வள்ளலுக்குரிய ஊர்களுள் ஒன்றாகிய அரசூர் பேரரசூர் எனவும் வழங்கிவந்தன என்று தெரிகின்றது. (South In- dian Inscriptions. Vol II Introduction Page 26.) எனவே, பெருமிலட்டூர், பேராற்காடு, பேரரசூர் என்று முற்காலத்தில் வழங்கிய ஊர்கள் முறையே மிலட்டூர், ஆற்காடு; அரசூர் என்று தற்காலத்தில் வழங்குவது போல, நமது குறும்பநாயனாரது திருப்பதியாகிய பெருமிழலையும் இஞ்ஞான்று மிழலை என வழங்குகின்றது என்றுணர்க.'

குறிப்பு : இஃது செந்தமிழ்த் தொகுதி 21 பகுதி 10-இல் வெளிவந்த கட்டுரையின் திருந்திய வடிவமாகும்.