பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

123


நிசதம் அளக்கக்கடவ நெய் உழக்கு' எனவும், போதரும் தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுக்களால் நன்கறியலாம்.

இனி, இடைமருது என்னுந் திருவிடைமருதூர், சோழ மண்டலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டின் உள் நாடுகளுள் ஒன்றாகிய திரைமூர் நாட்டில் உள்ளது என்பது அவ்வூரிலுள்ள திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. அவ்வுண்மையை,

'மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மற்கு யாண்டு 'க' ஆவது தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில்[1] ஸ்ரீ மூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு' எனவும்.

'திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர்நாட்டு உடையார் திருவிடை மருதுடையார்[2] கோயில்'

எனவும் போதரும் திருவிடை மருதூர்க்கோயிற் கல்வெட்டுக் களால் உணர்ந்துகொள்ளலாம். இக்கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ள இராசேந்திரசிங்கவளநாடும் உய்யக்கொண்டார் வளநாடும் சோழ மண்டலத்தில் முற்காலத்திலிருந்த வளநாடுகளாகும். அவற்றுள், இராசேந்திர சிங்கவளநாடு என்பது காவிரியாற்றிற்கு வடக்கே வெள்ளாறுவரையில் பரவியிருந்த ஒரு வளநாடாகும். உய்யக் கொண்டார் வளநாடு என்பது காவிரி யாற்றிற்குத் தெற்கே அப்பேராற்றிற்கும் அரிசிலாற்றிற்கும் இடையிலிருந்தது.[3]

வளநாடுகளை ஜில்லாக்கள் போலவும் நாடுகளைத் தாலுக்காக்கள் போலவும் கொள்வதே அமைவுடைத்தாம். எனவே, காவிரியாற்றிற்கு வடக்கே இராசேந்திர சிங்கவள நாட்டில் மண்ணிநாட்டிலிருந்த இடவை என்னும் ஊரு அப்பேராற்றிற்குத் தெற்கே உய்ய கொண்டார் வள நாட்டில் திரைமூர் நாட்டிலிருந்த டைமருது என்னும் ஊரும்


  1. SII Vol. V. No. 7. 10.
  2. Ibid No. 706
  3. Ibid Vol. II. No. 4.