பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


‘உரிந்தவுடை யார்துவரால் உடம்பைமூடி
       உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம் பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
       பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
        நிரந்துவரும் இருகரையும் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீளநோக்கித்
        திரிந்துலவு திருமுண்டீச் சரத்துமேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே’

என்ற அடிகளது திருப்பாடல் இனிது உணர்த்துதல் காண்க.

திருநாவுக்கரசு அடிகளது திருமுண்டீச்சரப் பதிகத்தில் இக்காலத்தில் கிடைத்துள்ளவை ஒன்பது திருப்பாடல்களே யாகும். இவற்றுள் திருக்கோயிலின் பெயரும் இறைவன் திருநாமமும் கூறப்பட்டுள்ளன வேயன்றி, ஒன்றிலேனும் ஊரின் பெயர் காணப்படவில்லை. திருஞான சம்பந்த சுவாமிகளும் தம் க்ஷேத்திரக் கோவையில் 'மாட்டூர் மடப்பாச்சிலாச்சிராமம் முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி' என்ற அடியில் முண்டீச்சரம் என்னுந் திருக்கோயிற் பெயரைக் குறித்துள்ளனரே யன்றி, இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரைக் கூறவில்லை.

இனி, கல்வெட்டுக்களின் துணைகொண்டுதான் ஊரின் பழைய பெயர் யாதெனக் காண்டல் வேண்டும். கிராமம் என்னும் ஊரிலுள்ள இத்திருக்கோயிலில் பத்தொன்பது கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றுள், மூன்று கல்வெட்டுக்கள் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இரண்டு கல்வெட்டுக்கள் விசயநகரவேந்தர் ஆட்சிக்காலத்திலும் வரையப் பெற்றவை. எஞ்சிய கல்வெட்டுக்கள் எல்லாம் சோழ மன்னர்களின் காலத்தனவாகும். இக்கல் வெட்டுக்களுள் மிக்க பழமை வாய்ந்தவை முதற்பராந்தக சோழன்காலத்துக் கல்வெட்டுக்களேயாம். இவற்றுள் ஒன்று, பல வரலாற்றுண்மைகளை நன்கு விளக்குவதாக உள்ளது. இக்கல்வெட்டின் முற்பகுதி, மூன்று வடமொழிச் சுலோகங்களிலும் பிற்பகுதி தமிழ்மொழியிலும் அமைந்துள்ளன. முற்பகுதி, கேரளதேயத்தில் புத்தூரில் பிறந்தவனும் இராசாதித்தனுடைய படைத்தலைவனுமாகிய வெள்ளங்குமரன் என்பான் பெண்ணை யாற்றங்கரையிலுள்ள மௌலி கிராமத்தில்