பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

127


மந்தரமலை போன்ற கற்றளி ஒன்று மாதேவர்க்கு அமைத்தனன் என்று உணர்த்துகின்றது. தமிழ்மொழியிலுள்ள கல்வெட்டுப் பகுதியை அடியிற் காண்க:

(1) ‘ஸ்வஸ்திஸ்ரீ கலியுக வர்ஷம் நாலாயிரத்து நாற்ப (2)த்து நாலு மதுரைகொண்ட கோப்பரகேசரிவன்மற் (3) கு யாண்டு

ஆவது கலியுக..ன்றா நாள் (4) பதினான்கு நூறாயிரத்து எழுபத் தேழாயிரத்து (5) முப்பத்து ஏழுஆக திருமுடியூர் ஆற்றுத்தளி (6) பெருமானடிகள் உடைய...ம் திரு (7) க் கற்றளியாக அமைப்பித்து இவ்வாட்டைம (8) கர நாயற்றுச் சனிக்கிழமை பெற்ற இரேவதி ஞான் (9) று கும்பதாரையால் (10) மூன்றுச்சி பதினாறு (11) அடியில் ஸ்ரீ ஆற்றுத்தளிப் (12) பெருமானடிகளை (13) த் திருக்கற்றளியினுள் (14) ளே புக எழுந்தருளுவித்து பிரதிஷ்டை செய்வி (15) த்தார் சோழர்கள் மூலப் (16) ருத்யர் ஸ்ரீ பராந்தக தேவரான (17) ஸ்ரீ வீர சோழப் பெருமானடிகள் (18) மகனார் ராஜாதித்த தேவர் பெரும் (19) படை நாயகர் மலைநாட்டு நந் (20) திக்கரைப்புத்தூர் வெள்ளங் (21) குமரன் இது பன்மாகேஸ்வர (22) ரக்ஷை ரக்ஷிப்பார் ஸ்ரீ பாதம்தலை (23) மேலன[1]

இக் கல்வெட்டுப்பகுதியால் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மனாகிய முதற் பராந்தக சோழனது ஆட்சியின் 36- ம் ஆண்டாகிய கலியப்தம் 4044ல் திருமுடியூரிலுள்ள ஆற்றுத் தளிப்பெருமானடிகளின் திருக்கோயில் கருங்கற்கோயிலாக அமைக்கப்பெற்றது என்பதும் அதனை அவ்வாறு அமைப்பித்தவன், முதற்பராந்தக சோழன் புதல்வன் இராசாதித்த சோழனுடைய பெரும்படைத்தலைவனும் சேரநாட்டு நந்திக்கரைப் புத்தூரனுமாகிய வெள்ளங்குமரன் என்பதும் நன்கு வெளியா கின்றன. இதில் குறிக்கப்பெற்றுள்ள கலியுக ஆண்டு, கி.பி. 943 ஆகும்.[2] 'பெண்ணை யாற்றங் கரையிலிருத்தல் பற்றி இத்திருக் கோயில் ஆற்றுத்தளி என்று அந்நாளில் வழங்கப்பட்டுள்ளது. அன்றியும், இற்றைக்கு ஆயிரத்துப் பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயில்


  1. Archaeological Survey of India, Annual Report 1905-06. 182 - 3.
  2. Epigraphia Indica. Vol. VII. p. 261.