பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அமைந்துள்ள ஊர் திருமுடியூர் என்ற பெயருடன் விளங்கியது என்பது தமிழ்க் கல்வெட்டுப்பகுதியால் தெளிவாக அறியக் கிடத்தல் காணலாம். இக்கல்வெட்டின் முற்பகுதியி லுள்ள வடமொழிச் சுலோகத்தில் இவ்வூர் மௌலி கிராமம் என்று கூறப்பட்டிருத்தல் உணரற்பாலதாகும். எனவே, திருமுடியூர் என்பது மௌலிகிராமம் என வடமொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. மௌலி என்ற வடசொல், முடி என்று பொருள்படும் என்பது கற்றார் பலரும் அறிந்ததேயாகும். சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் திருமுடியூர் என்று வழங்கப்பெற்ற இவ்வூர், பிற்காலத்தில் மௌலிகிராமம் என்னும் வடமொழிப் பெயர் எய்தி இறுதியில் கிராமம் என்று வழங்கப்பட்டு வருதல் அறியத்தக்கது. ஆகவே, திருமுடியூர் எனப்படுவதே இதன் பழைய பெயர் என்பது நன்கு துணியப்படும்.'