பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


2. திருவிளையாடற் புராணமுடையார் வன்னி, கிணறு, இலிங்கமாகிய மூன்றுமே அவ்வணிகமாதின் மன்றற்குரிய சான்றுகள் எனக் கூறியிருக்கின்றனர்.[1] திருப்புறம்பயபுராண முடையார் மடைப் பள்ளியுஞ்சேர்த்து நான்கென்கின்றனர்.[2]

பண்டைத்தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்தில் தன் மன்றற்குச் சான்றாக மடைப்பள்ளியும் அவ்வணிகமாதாற் காட்டப்பட்ட தென்று கூறப்பட்டிருக்கிறது.[3] இதனால், திருப்புறம்பயபுராண முடையார் கூற்று வன்மையுடைத் தென்பது நன்கறியக்கிடக் கின்றது. ஆனாற் சிலப்பதிகாரமியற்றியருளிய ஆசிரியர் இளங்கோவடிகள் அம்மாது, வன்னியும் மடைப்பள்ளியும் தன்மன்றற்குச் சான்றாகக் காட்டினாரென்றுரைத்து எஞ்சிய விரண்டையுங் கூறாதுவிடுத்தமைக்குக் காரணம் தற்காலத்துப் புலப்படவில்லை.

3. வணிகமாதுபிறந்தநகரம் கடற்புறத்துள்ள ஒரு பட்டினம் என்று திருவிளையாடற் புராணத்திற் சொல்லப் பட்டிருக்கிறது.[4] திருப்புறம் பய புராணத்திலோ காவிரிப் பூம்பட்டினமென்று கூறப்பட்டிருக்கிறது.[5]

இதற்கு ஒருசாரார் கூறும் சமாதனமாவது தற்காலத்துப் ‘பட்டினம்’ என்பது அநேகபட்டினங்களிருப்பச் சென்னையை


  1. திருவிளையாடற்புராணம் 64 வது படலம் 31.
  2. அன்னதன்மையின் மதுரையிற்போந்து நின்னருளாற்
    பின்னர்நன் மணம்புரிகுது மென்றதும் பெரியோன்
    வன்னிவன்னிசேர்மடைப்பளிமலிபுனற்கூறு
    மின்னநம்வடிவிவையெலாங்கரியெனவெண்ணி.

    திருப்புறம்பயபுராணம் 6வது சருக்கம் 41.

    புதுமணந்தனையாழினோர் தன்மையிற்புணர்வீர்
    முதியபுன்மொழிகிளையினோர் மொழிந்திடுநாளின்
    மதுரையம்பகுதியிவையுடன் கூடயாம்வந்தே
    வுதவிச்சாக்கியங்குணர்த்துவதுண்மை யென்றுரைத்தார். மேற்படி மேற்படி 42.

  3. வஞ்சினமாலை- 5, 6
  4. திருவிளையாடற்புராணம் 64-வது படலம்.2
  5. பற்பலவைகல்கழிந்த பின்னெவரும் பழிச்சிடும் பூம்புகார் வசியன்
    பொற்புளநாகமங்கையர் தாழப்பூதல மடந்தையர்பரவ
    வற்புதவானத்தரம்பையர் நாணவழகொருவடிவெடுத்தனைய
    கற்பகம்படர்ந்தகாமர்பூங்கொடியிற் கன்னியையரிதினிற் பயந்தான். மேற்படி மேற்படி 19.