பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


என்பது கூடல்வாழிறைவன் “களவியல்“ அருளிய வரலாற்றைக் கூறுகின்றது.

“சமயக்கணக்கர் மதிவழிகூறா
துலகியல்கூறிப் பொருளிதுவென்ற
வள்ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர்முன்
முதற்கவிபாடிய முக்கட்பெருமான்“

என்பது தமிழ்ச்சங்கப்புலவர்முன் இறைவன் திருக்குறளுக்குச் சிறப்புக்கவியாக முதற்கவிகூறியருளியதை யுணர்த்துகின்றது.

“அருந்தமிழ்க்கீரன் பெருந்தமிழ்ப்பனுவல்
வாவியிற்கேட்ட காவியங்களத்தினன்”

என்பது சோமசுந்தரக்கடவுள் பொற்றாமரைக்கரையி லெழுந்தருளிக் கடைச் சங்கப்புலவர் தலைவராய நக்கீரனார் கூறிய கோபப் பிரசாதம் பெருந்தேவபாணி முதலிய செந்தமிழ் நூல்களைக் கேட்டருளியதைக் குறிக்கின்றது.

“அருமறைவிதியு முலகியல்வழக்குங்
கருத்துறை பொருளும் விதிப்படநினைத்து
வடதொன் மயக்கமும் வருவனபுணர்த்தி
யைந்திணைவழுவா தகப்பொருளமுதினைக்
குறுமுனிதேறவும் பெறுமுதற்புலவர்க
ளேழெழுபெயருங் கோதறப்பருகவும்
புலனெறிவழக்கில் புணருலகவர்க்கு
முற்றவம்பெருக்க முதற்றாபதர்க்கு
நின்றறிந்துணர்த்தவுந் தமிழ்ப்பெயர்நிறுத்தவு மெடுத்துப்பரப்பிய விமையவர்நாயகன்“

என்பது ஆலவாயெம்பெருமான் “களவியல்“ அருளிய வரலாற்றை விளக்குகின்றது.

மேற்காட்டிய சரித்திரங்களை மிக்க அழகாகத் தம்நூலில் கூறிப் போந்த இவ்வாசிரியர் கடைச்சங்ககாலத்திற்குப் பிற்பட்ட வராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும்.[1]


  1. இந்நூலுடையார், கூடல்நாயகன் “களவியல்” அருளியவரலாற்றைக் கூறுமிடங்களில், "மாறனும்புலவரு மயங்குறுகாலை அன்பினைந்திணையென் றறுபது சூத்திரந் - தெளிதரக்கொடுத்த” னரென்றும், “ஐந்திணைவழுவாதகப் பொருளமுதினைக் குறுமுனி