பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


கழறிற்றறிவார் புராணத்தால் நன்கறியக் கிடக்கின்றது. இனி நடராஜப் பெருமானை நாடோறும் பூசித்து வந்த இச்சேரமான் அவ்விறைவன் திருச்சிலம்பொலியை நாளும் தஞ்செவியாரக் கேட்டுவந்தனரென்பதை,

”வாசந்திருமஞ்சனம்பள்ளித்தாமஞ்சாந்தமணித்தூபந்
தேசிற்பெருகுஞ்செழுந்தீபம் முதலாயினவுந்திருவமுது
மீசற் கேற்றபரிசினாலருச்சித்தருள்வெந்நாளும்
பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்விளம்பினொலியளித்தார்”

என்னுந் திருத்தொண்டபுராணச் செய்யுளாலறியலாம். இதனை, நமது கல்லாடனாரும் 'பரிபுரக்கம்பலையிரு செவி யுண்ணுங் - குடக்கோச்சேரன்' என்று தம்நூலில் மிகச்சுருக்க மாய்க் குறித்திருக்கின்றனர். ஆகவே, இச்சேரலற்குப் பிந்தியவரே நமது கல்லாடனாரென்பது இனிதுவிளங்கும். இச்சேரர் பெருமானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பெருநட்பினர்களென்றும், இருவருஞ் சேர்ந்து ஒரே காலத்தில் திருக்கைலாயஞ் சென்றவர்களென்றும் முன்னரே கூறியுள்ளேன். இதனால், சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகாலத்திற்குப் பிந்தியவரே கல்லாடமுடையாரென்பது நன்கு வெளியாதல் காண்க. பொய்யடிமையில்லாத புலவர்க்கு மடியேன் என்று கடைச்சங்கப் புலவர்கட்குத் தமது திருத்தொண்டத்தொகையில் வணக்கங்கூறிப் போந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள் அச்சங்க காலத்திற்குப் பின்னரே விளங்கிய வராதல் வேண்டும்.[1] அன்றியும், சுந்தரமூர்த்தி சுவாமிகள், கி.பி.


  1. திருவனந்தபுரம் ஸ்ரீமான் சேஷையரவர்கள் தாம் எழுதியுள்ள "மாணிக்கவாசகர் காலம் என்னு மாங்கிலநூலில், 'பொய்யடிமை யில்லாதபுலவர்' என்னுஞ் சொற்றொடர் மாணிக்க வாசக சுவாமிகளையே குறிக்குமென்றும், நம்பியாண்டார் தமது திருத் தொண்டர் திருவந்தாதியிற் கூறியுள்ளபடி கடைச்சங்கப் புலவர்களைக் குறியாதென்றும் எழுதியிருக் கின்றனர். அதற்கு அவர்கள் கூறுங்காரணம் கடைச்சங்கத்தில் ஜைனர், பௌத்தர் முதலிய புறப்புறச்சமயிகளுமிருந்தமையால், அப்புலவர்கட்கு நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வணக்கம் கூறியிருக்கமாட்டார்களென்பதே. இஃதுண்மையே. ஆனால் நக்கீரர், கபிலர்: பரணர்முதலிய சிவாநுபூதிச் செல்வர்களும் அச்சங்கத்து வீற்றிருந்தமை யால், அப்புலவர்களையே, "பொய்யடிமையில்லாத புலவர்" என்று நம்சுவாமிகள் கூறியுள்ளதாகக் கோடற்குத் தடையென்னை? இங்ஙனங்கொள்ளாது, அச்சொற்றொடர் மாணிக்கவாசகப் பெருமானையே குறிக்குமெனக்கூறின், தொகையடியார் ஒன்பதின்மரென்னும் வழக்கொழித்து எண்மரெனவும், தனியடியார் அறுபத்துமூவ ரென்னும் வழக்கொழித்து அறுபத்துநால்வரெனவுங் கொள்ள வேண்டும். இது முன்னோர்கொள்கைக்கு முற்றிலும் முரணாகின்றது. இனி, நம்பியாண்டார், மணிவாசகப் பெருமானையும், அவர்களருளிய நூலினருமையையும் நன்கறிந்துள்ளா ரென்பது.