பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அநிலமா மரியே யமுதமாய் வருவன்
       ஆரெனை யுலகினி லொப்பார்
சந்தத மிந்த வரிசையே பெற்றுத்
       தரித்திர ராசனை வணங்கித்
தலைசெயு மென்னை நிலைசெய் கல்யாணிச்
       சாளுவத் திருமலை ராயன்
மந்தரப் புயனாங் கோப்பைய னுதவு
       மகிபதி விதரண ராமன்
வாக்கினாற் குபேர னாக்கினா னிவனே
       மாசிலீ சானனா னவனே

என்பதாம். வறுமை நோயினால் பற்றப்பட்டு வருந்திக்கொண்டிருந்த தம்மைப் பெரிதும் ஆதரித்துக் குபேரன் போன்ற செல்வமுடைய வனாகும்படி செய்தவன் சாளுவமன்னனாகிய திருமலை ராயன் என்பதையும் அவன் விதரண ராமன் என்ற வேறொரு பெயரும் உடையவன் என்பதயுைம் கோப்பையனது புதல்வன் என்பதையும் இப்பாடலில் இப்புலவர் கூறியுள்ளார். திருமலை ராயன் என்ற ஓர் அரசனது கல்வெட்டுக்கள் நம் சோழமண்டலத்தில் பாபநாசம், தஞ்சாவூர், திருவானைக்கா முதலான இடங்களில் காணப்படுகின்றன. எனவே, இவ்வேந்தன் இந்நிலப்பரப்பை ஒரு காலத்தில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலப்படுகின்றது. அரிசிலாற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் ஓடுகின்ற திருமலைராசன் என்ற ஆறு இவனது ஆட்சிக்காலத்தில் வெட்டப் பெற்றதேயாகும். அன்றியும், காரைக்காலுக்குத் தெற்கே ஆறு மைல் தூரத்திலுள்ள திருமலைராசன் பட்டினமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப் பெற்ற நகரமாகும். இவனது ஆட்சிக் காலத்தை நன்கு விளக்கக்கூடிய கல்வெட்டொன்று தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரம் என்ற திருக்கோயிலில் உள்ளது. அது ‘(2) சுபமஸ்து சகாப்தம் ஆயிரத்து முன்னூற்று எழுபத்தேழின் மேல் செல்லாநின்ற பவ வருஷத்துக்குச் செல்லும் (3) யுவ வருஷம் சித்திரை மாதம் எ... ஸ்ரீமத் மகாமண்டலேஸ் வரன் மேதினீஸ்வரன் கண்ட கண்டாசி சாகுவ சாளுவத் திருமலை தேவ (4) மகாராசர் தஞ்சாவூர். வ... ண்டயம் தஞ்சை மாமணிகண்டங்குறை, நாகளாபுரம், பழமாறன் ஏரி, அன்பதின்