பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அந்தாதியின் ஏட்டுப் பிரதி எவ்விடத்திலேனும் உளதா என்று ஆராய்ந்துணர்த்துமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள் கின்றேன்.

மொழிந்திடு மெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின்
கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கோடல் கருமுகில்வான்
[1]பொழிந்திடு மெல்லருவிச் சிராமலைப் புகுந்திடுமின்
இழிந்திடு நும்வினை யீசனங் கேவந் தெதிர்ப்படுமே. (3)

நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சநுங்கித்
தெற்கும் வடக்குந் திரிந்தே வருந்திச் சிராமலைமேற்
பொற்குன் றனைக்கண்டு கொண்டே வினிப்புறம்
                               போகவொட்டேன்
கற்குன் றனையநெஞ்சிற்செல்வ ராவில்லை காரியமே. (5)

வடிக்கும் கருங்குழல் மேலும்வைத் தாள்மொய்த்த வண்டகற்றிக்
கொடிக்குங் குமக்கொங்கை மேலுங்கொண் டாள்கொண் டலந்தி
                                      மந்தி
பிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போலநன்று நீ
தடிக்குங் கலையல்கு லாளன்ப நீதந்த தண்டழையே.(16)

தழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு
பிழைகொண்டு பொய்யென்று பேசிவிட் டேற்கலர் பேரருளால்
மழைகொண்ட கண்டர்தம் மானிற் சிராமலை வந்துநின்றார்
உழைகொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றிடிலே.
(17)

பொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிகொண்ட
மன்வண்ண மால்கட னஞ்சம் மிருந்த மறைமிடற்றான்
றன்வண்ணந் தீவண்ணங் கண்டு தளிர்வண்ணம் வாடிச்சென்றான்
முன்வண்ண நுண்ணிடை யாளெங் ஙனேசெய்யு மெய்ப்பணியே.
(22)

அயிர்ப்புடை யாய்நெஞ் சமேயினித் தேறர மங்கையல்லள்
செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய்ப்
பயிர்ப்புடை யாளடிப் பார்தோய்ந் தனபடைக் கண்ணிமைக்கும்
உயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே.
(24)


  1. இவ்வடி அலகிட முடியாமலிருக்கின்றது: 'சிராமலை' என்பது சிரபுரம் என்றிருப்பின் பொருந்தும்.