பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


தமிழ் மொழியிலுள்ள பரணி நூல்களுள் சயங்கொண்டாரது கலிங்கத்துப் பரணியும், பிள்ளைத் தமிழ்களுள் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழுமே பழமை வாய்ந்தவையாகும்.

கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அறநிலை விசாகனாகிய வத்சராசனது பாரதம், பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், காங்கேயன் பிள்ளைக் கவி, மெய்கண்டாரது சிவஞான போதம், அருணந்தி சிவாசாரியரின் சிவஞான சித்தியார்,இருபா இருபஃது, மனவாசகங்கடந்தாரது உண்மை விளக்கம் என்னும் நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள், வத்சராசனது பாரதமும் காங்கேயன் பிள்ளைக் கவியும் இந்நாளில் கிடைத்தில. தமிழ் மொழியிலுள்ள சைவசித்தாந்த நூல்கள் பதினான்கினுள் சிவஞான போதமே தலைமை வாய்ந்ததாகும்.

பிற்காலப் பாண்டியர் காலம்

இது கி.பி. 1216 முதல் 1342 வரையில் பாண்டியரது இரண்டாம் பேரரசு நடைபெற்ற காலமாகும். கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழேந்தியாரது நள வெண்பாவும் பொய்யா மொழிப் புலவரது தஞ்சைவாணன் கோவையும் இயற்றப்பெற்றுள்ளன. திருக்குறள், பரிபாடல் இவற்றின் உரையாசிரியராகிய பரிமேலழகரும், தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியராகிய சேனாவரையரும் இக்காலத்தில் இருந்தவர்களே யாவர்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாசம் முதலான சைவ சித்தாந்த நூல்கள் எட்டும், கோயிற் புராணமும், இரட்டையர்கள் பாடிய தில்லைக் கலம்பகமும், திருவாமாத்தூர்க் கலம்பகமும், ஏகாம்பரநாதர் உலாவும் தோன்றியவையாதல் வேண்டும்.

அந்நியர் ஆட்சிக் காலம்

கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் நம் தமிழ்நாடு மகமதியரது ஆட்சிக்கு உள்ளாயிற்று. பிறகு, கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட