பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


அல்லவர் தமையும்நல்லவ ரெனவே
      யனுதின மதித்துகந் திடுமோர்
சொல்லிடும் பிரிய வன்புமற் றிலையேற்
      சுகமில்லை யென்பது துணிபே.(3)
பிறர்க்கெலா மின்பம் பெருக்குவ தன்பே
      பிறர்செயுந் தீங்கனைத் தினையும்
பொறுத்துமேன் மேலும் மகிழ்வது மன்பே
      போற்றிய பிறர்வயி னுற்ற
சிறப்பது கண்டங் கழுக்கறா விடுத்துச்
      சித்தமுட் களிப்பது மன்பே
அறச்சிறி தேனு மன்புதன் பெருமை
      யறிந்திறு மாப்படை யாதே.(4)

அன்னியர் குணமா மன்பெனு மணங்கி
      னழகினை யின்னமுங் கேண்மோ
தன்னியல் நடக்கை தக்கவா றன்றித்
      தவறுறாத் தன்மைய டனது
மன்னிய வுரிமைப் பொருடனக் காக
      மறந்துமே வழங்கிட வறியாள்
என்னை செயினு மெளிவரு கோப
      மில்லடீங் கொன்றுமே யெண்ணாள்.(5)

கலிவிருத்தம்

கொடுமை யென்றெவர் கூறினுங் கேட்டுளம்
நடுந டுங்குவள் நாணமுற் றஞ்சுவள்
கெடல ரும்புகழ் மெய்ம்மை கிளத்தல்கேட்
டுடல மெங்கும் புளகித் துவப்பளே(6)

வந்த வெல்லாம் பொறுத்து மகிழ்வளே
நந்தல் செய்யினும் நம்புதல் விட்டிடாள்
எந்த வேளையு மேல்வரு மின்பமே
சிந்தை செய்குவள் தீங்கு கவனியாள்(7)

அறுசீரடியாசிரிய விருத்தம்

இப்படி யாவ ராலு மெய்துதற் கரிதாய் நின்ற
செப்பிய பரானு கூல தெரிசன சித்த மொன்றே