பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

205


இனியன துடித்தன வீண்டுமாண்டென
நனிதுடிக்கின்றனவாய்ந்து நல்குவாய்.

இதன் கருத்து :- விசுவாமித்திரமுனிவருடன் இராமபிரான் என்னை மனம் புணர மிதிலைக் கெழுந்தருளியநாளில் என்னுடைய கண், தோள், மார்பு முதலியன என்பக்கந்துடித்தனவோ அப்பக்கத் தீண்டுந் துடிக்கின்றன; இதன்பலனை ஆராய்ந்து கூறக்கடவாய் என்பதாம்.

சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 34.

மறந்தனெனிதுவுமோர்மாற்றங்கேட்டியால் அறந்தருசிந்தை யென்னா விநாயகன் பிறந்தபார்முழுவதுந் தம்பியேபெறத்
துறந்துகான்புகுந்த நாள்வலந்துடித்ததே.

இதன் கருத்து :- என்னாருயிர் நாயகன் தனது இராஜ்ய முழுதுந் தம்பிக் களித்து நாடுதுறந்து காடுசென்ற நாளில் என் கண் முதலியன வலப்பக்கத்திற் றுடித்தன என்பதாம்.

சுந்தரகாண்டம் காட்சிப்படலம் 35.

நஞ்சனையநன்வனத்திழைக்கு நாளிடை வஞ்சனையால்வலந்துடித்தவாய் மையால்
எஞ்சலவீண்டு தாமிடந்துடித்ததால்
அஞ்சலென்றிரங்குதற் கடுப்பதியாதென்றாள்.

இதன் கருத்து :- வனத்தின் கண் இராவணன் எனக்குத் தீங்கிழைத்த நாளில் என் கண் முதலியன வலப்பக்கத்திற் றுடித்தன; ஈண்டு இடத்திற் றுடித்தன; இதனால் எனக்குண்டாகும் நன்மை யாது என்றன ளென்பதாம்.

இவ்வண்ணம் சீதாபிராட்டியார் கூறிய கட்டுரையைச் செவி சாய்த்துக் கேட்டுக் கொண்டிருந்த திரிசடையென்னு மன்பினாள் “உன்றுணைக்கணவனையுறுதலுண்மையால்” என்று அதன்பலனைத் தெரிந்து கூறினாள்.

இதுகாறுஞ் செய்த ஆராய்ச்சியால் கண், தோள் முதலிய இடத்திற்றுடித்தால் நன்மையும் வலத்திற்றுடித்தால் தீமை யுண்டாகு மென்பது அறியக்கிடக்கின்றது.