பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


...ஒரு பிடி தயிர் நாழி பாக்கொன்றுமாக செவெலூர் பட்டம் படாரியான் பாண்டியதியரசி வைத்த துளைப்பொன் ௫-ம் பன்மாகே ... (3) ஒராருத்... தற்கு நாடுரியரிசி தயிர் மூழக்கு கறி ஒன்று வேள்கோவுக்கு நாடுரி அடுவர்க்கு முந்நாழி விறகுக்கு நாழி ஆக பொன் ரு-ம் முதல் ... (குடுமியான் மலைக் கல்வெட்டு).

III (1) திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் - தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் - காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்க பாடியும் - நுளம்ப பாடியும் தடிகை வழியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் - எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் - திண்டிறல்வென்றி தண்டாற் கொண்ட - தன்னெழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவி ராஜராஜ கேசரிவன்மராகிய ஸ்ரீ ராஜராஜ தேவற்கு யாண்டு 20 ஆவது கேரளாந்தக வளநாட்டு உறத்தூர்க் கூற்றத்து பிரம தேயம்விக்கிரமகேசரி சதுர்வேதிமங் கலத்துப் பால் திருவிறை யான்குடி மகாதேவற்கு... சேனாபதி உத்தம சோழ நல்லூருடைய யான்பாளூர் அம்பலத்தாடியான் முடிகொண்ட சோழ விழுப்பரையன் தாயார் பாசூர் நங்கையார் பேரால் பாசூர் நங்கைநல்லூர் என்னும் பெயராலும் இவ்வூர் ஏரி அத்தாணிப் பேரேரி என்றும் பெயராய் இப்பாசூர் நங்கை நல்லூர் நாங்கள் இறையிலியாக விற்றுக் கொடுத்தோம். இவ்வூர், நிலம் முன் இத்தேவற்குவேண்டும் நிவந்தங்களுக்கு செய்கின்றமையில் சித்திரைத் திருநாள் திருவாதிரைத் திருநாள் ஏழுநாளும் திருஉத்ஸவம் எழுந்தருளி தீர்த்தமாடியருள வேண்டும் அழிவுகளுக்கும் இத்தேவற்கு முன் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அடிகள் மார்க்கு நிவந்தம் மிலாமையால் இத்திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வார் ஒருவர்க்கு நிசதம் நெல்லு பதக்காக நால்வர்க்கு நிசதம் இருதூணிக்கப்பட முதல் ஓராட்டைக்கு காசு ஆக நால்வர்க்குக் காசு நிவந்தமாக செய்தோம்... (குளத்தூர் தாலூகா திருவிளாங்குடியிலுள்ள கல்வெட்டு).

மேலே குறித்துள்ள மூன்று கல்வெட்டுக்களும் மாசித் திங்களில் நடத்தப் பெறும் மக விழாவும் பங்குனித்