பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

213


நித்தம் நானாழி அரிசி திருவமுதுக்கு சந்திராதித்த வரை செல்வதாக வைச்சு கொடுத்தேன் கண்ணன் (4) தேவனான உத்தம பாண்டியச் சிலைசெட்டியேன். (Travancore Archaelolgical Series Vol. III P.57.)

II. (1) ஸ்வஸ்திஸ்ரீ கொல்லந் தோன்றி இருநூற்றுத் தொண்ணுற் றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு நாஞ்சி நாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து நகரத்தோம் இந்நகரத்து திருமேற்கோயில் பவித் (2) திர மாணிக்க விண்ணக ரெம்பெருமானுக்கு இந்நகரத்தோம் சந்திராதித்த வரை செல்வ தாக நீர் வார்த்துக் கொடுத்த நிலமாவது (11) இந் நகரத்துப் புறவிளாகத் தூவச் செய்யும் கோன் கேரளன் திருத்துக்கும் இந்நிலத்துக்கும் பெருநான் கெல்லை கீழெல்லை இடைக் கோ (3) ட்டில் நின்று அணைக்குப் போகிற வழிக்கும் படாபாறைக்கு மேற்கும் தென்னெல்லை அய்யன்கோயிலுக்குஞ் சாலார் விளாகத்தில் நின்று இறங்குகிற ஆற்றுக்கும் படாபாறைக்கும் வடக்கும் ஆற்றுக்கு கிழக்கும் வடவெல்லை ஆற்றுக்கு தெற்கும் இவ்விசைந்த பெரு நான் கெல்லைக்குட் பட்ட (4) தூவச் செய்யும் திருத்தின பள்ளக் காலால் நீர் பாயும் நிலமுட்படக் கொடுத்த நிலம் பதின்மூன்று மாவுக்கும் ஊர்காலால் மாத்தால் எழு கலநெல்லும் காற் காசும் கடமையிறுப்பானாக இந்நகரத்துக் கோன் கேரளனுக்கு இந்நிலம் அட்டிப் பெற்றுக் காராண்மையாக நீரோடு மட் (5) டிக் கொடுத்தோம் அழகிய பாண்டியபுரத்து நகரத்தோம். கோன் கேரளனுக்கு (11) இக்கடமை கோயிலி லிட் டளந்து கொடுப்பது (11). (Travancore Archaeological Series Vol. III P. 58.)

இக்கல்வெட்டுக்களால் புதிய கொல்லம் அமைக்கப் பெற்ற ஆண்டு முதல் தான் கொல்லம் ஆண்டு வழங்கத் தொடங்கிற்று என்பது நன்கு அறியக்கிடக்கின்றது.

இனி, 'செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலத்தும் தங் குறிப்பினவே திசைசொற்கிளவி' என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் தெய்வச்சிலையார் கூறியிருப்பது கொல்லத்தைப் பற்றிய சில செய்திகளை இனிது புலப்படுத்துகின்றது. அது 'பன்னிரு நிலமாவன; - குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குட்-