பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பிள்ளைக்கு திருவன் சோழ வேந்தவேளானும் திருவுடையான் கோதண்டனும் சுந்தன் கொழுந்தும் சுந்தன்கணியும் நம்பி கொழுந்தும் நம்பியன்மனும் (8) பொன்னன் ஒன்றாயிர முடையானும் இவ்வனை வோமும் பன்மாகேஸ்வரரட்சை (புதுக்கோட்டை நாட்டுக் குடுமியான் மலைக் கல்வெட்டு).

இக்கல்வெட்டு, முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் கி.பி. 1219ஆம் ஆண்டில் வரையப்பெற்றது. இதில் இரண்டிடங்களில் திருவாளன் சோழமூவேந்த வேளான் என்றும் இரண்டிடங்களில் திருவன் சோழமூவேந்த வேளான் என்றும் வந்திருத்தல் அறியத்தக்கது. இக்கல்வெட்டில் ஒருவனையே ஓரிடத்தில் திருவாளன் என்றும் மற்றோரிடத்தில் திருவன் என்றும் கூறியிருத்தலால் இவ்விரண்டும் மரியாதைக் குரியனவாக முற்காலத்தில் வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது வெளிப்படை. அன்றியும் மற்றொரு வனைத் திருவுடையான் என்று இரண்டிடங்களில் குறித்திருப்பது ஈண்டு உணரற் பாலதாகும். எனவே, முற்காலத்தில் மரியாதைக்குரிய அடை மொழியாக இயற்பெயருக்கு முன்னர்ச் சேர்த்து வழங்கப் பெற்றவை திருவாளன், திருவன், திருவுடையான் முதலியன என்பது இக்கல்வெட்டால் நன்கு வெளியாதல் காண்க. இவற்றுள், நமது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வழக்கிற் கொணர்ந்து நிலைபெறச் செய்துள்ள திருவாளர் என்பது பழையகாலத்திலும் இதே பொருளில் வழங்கி வந்தமை அறிந்து மகிழ்தற்குரியதாகும்.

7. காயம் :- இந்நாளில் காயம் என்னுஞ் சொல் பெருங்காயம் (Asafoetida) என்ற பொருளில் வழங்கி வருகின்றது. பழைய தமிழ் நூல்களில் பயின்றுவரும் அச்சொல் இப்பொருளை யுணர்த்தவில்லை. எனவே, அச்சொல்லுக்கு இப்பொருள் உலக வழக்கில் மாத்திரம் இக்காலத்தில் இருந்து வருதல் உணரத்தக்கது. ‘படைகொண்டார்‘ என்று தொடங்கும் 253ஆம் குறட்பாவின் விசேடவுரையில், ‘சுவைப்பட வுண்டல் காயங்களால் இனிய சுவைத்தாக்கி யுண்டல்‘ என்று ஆசிரியர் பரிமேலழகர் கூறியுள்ளனர். இதனால் இனிய சுவையைக் கொடுத்தற்குக் காயங்கள் சேர்க்கப்படுதல் வேண்டும் என்பது வெளியாகின்றது. அன்றியும்.