பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

223


அபின் முதலியவற்றைப் போல் இதன் வாணிகமும் அரசாங்கத்தாரின் பக்கத்தில் இருந்தது. பின்னர் இதனை மாத்திரம் விலக்கி விட்டனர். மூன்றாம் ஜார்ஜ் மன்னன் காலத்தில் (1760 1820) பொடியின் பெருமை மேனாட்டில் எங்கும் பரவலாயிற்று. ஆனால் இந்நாளில் பொடியைக் காட்டிலும் புகைச் சுருட்டை உபயோகித்தலே சிறந்த நாகரிகம் என்று மேனாட்டார் கருதுகின்றனர். இது அமெரிக்காவிலுள்ள பிரேசில் என்ற நாட்டிலிருந்து நம் நாட்டிற்குக் கி.பி. 1617 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஜிஹாங்கீர் சக்கரவர்த்திக்கு ஐரோப்பியன் ஒருவன் முதலில் இதனைப் பரிசிலாகக் கொணர்ந்து கொடுத்தனன் என்று கூறுகின்றனர். இப்போது இது நம்நாட்டில் எங்கும் பரவியுள்ளது.