பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


மறந்துரை வழாமையுங் குறிப்பறிந் தொழுகலுங்
கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலு

30.மீட்டவை வினவலும் விடுத்தலு

முடைத்தலு முடைய ராகி நடையறிந் தொழுகு
நன்மா ணாக்க ரென்ப மண்மிசைத்

33.தொன்னூற் பரவைத் துணிபுணர்ந் தோரே

என்றது பொதுப் பாயிரம்.

உரை: ‘எந்நூலுரைப்பினும் அந்நூற்குப் பாயிரமுரைக்க’ வென்பது மரபாகலிற். பாயிரமுரைத்தே, நூலுரைக்கப்படும். என்னை? ‘ஆயிர முகத்தானகன்ற தாயினும் - பாயிர மில்லது பனுவலன்றே‘ என்பதாகலின், பொதுப் பாயிரமென்ற வதனானே, சிறப்புப் பாயிரமும் பெற்றாம். அவை அவ்வந் நூல்களிற் கண்டு கொள்ளப்படும்.

இப்பொதுப் பாயிரம் என்னுதலிற்றோ வெனின், ஈவோன்றன்மையு மீதலியற்கையுங் கொள்வோன்றன்மையுங் கோடன் மரபுங் கூறுதனுதலிற்று. என்னை? ‘ஈவோன்றன்மை ஈதலியற்கை கொள்வோன்றன்மை கோடன் மரபென - வீரிரண் டென்ப பொதுவின் றொகையே‘ என்றாராகலின். அங்ஙனம் பொதுவுஞ் சிறப்பு மென்றிருவகைப்பட்டது பாயிர மென்றார்க்குப் பாயிர மென்ற பொருண்மை என்னையெனின், பாயிரம், புறவுரை, முகவுரை, தந்துரை, அணிந்துரை, பதிகம், நூன்முகம், புனைந்துரை (என்பன) ஒரு பொருட்கிளவி; இவையெல்லாம் காரணப் பெயர்; அப் பாயிரந்தான், நூலோ வேறோவெனின், நூலின் வேறெனப்படும். அஃதேயெனின் கேட்பான் புகுந்தோன் நூல்கேளானாய்ப் புறவுரை கேட்கப்பயந்த தென்னை யெனின், பாயிரங் கேட்டார்க் கன்றி நூல் கேட்கலாகாது; என்னை? நூல் கேட்கப் படுமாசிரியனையும் நூல் சொல்லு முறைமை யினையும் அறிந்து, தாம் நூல் கேட்கப்படுவோராதலு முணராது நூல் கேட்பவே யெனிற், கல்லார் பக்கங் காலமுமிடனுமறியாது எல்லாரு மவ்வாற்றான் நூல் கேட்கத் தொடங்குவார். ஆகவே பயந்தவைப் படாது பலராலு மெள்ளப்படு மென்பது; அதனா லீவோன் றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன் றன்மையுங் கோடன் மரபும் உணர்ந்தே, நூல் கேட்கவேண்டு மென்பது; அல்ல