பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியப் பொதுப் பாயிரம்

235


தூஉம் நூல், உலகத்தினின்று நிலவல் வேண்டில், ஆசிரியரும் மாணாக்கருமாகியொருவ ரொருவர்க் குரைத்து நடைகாட்டல் வேண்டும்.

ஆகவே, அவ்வாசிரியருரையு மாணாக்கருரையு மின்னராகல் வேண்டுமெனவும், அவ்வாறு கற்பிக்கவும் இவ்வாறு கேட்கவும் வேண்டுமெனவுங் கூறுதல், எந்நூற்கு முபகாரமுடைத்து, அதனானும் பாயிரம் கூறல் வேண்டுமென்பது; மற்றுச் ‘சிறப்புப் பாயிரம்’ எற்றுக்கோ வெனின், அதனது பயனுமாண்டே கூறுதும், அவ்விரு வகைப் பாயிரமும் மாடத்தினை யூடு காண்பார்க்கு வாயின் மாடம் போல நூலின் வேறாயு நூலுணர்வார்க் கின்றியமையாவாயின வென்பது; மற்றுப் பொதுப் பாயிரம் என்ற பொருண்மை யென்னை எனின், தன்னால் உரைக்கப்படு நூற்குச்சிறந்த தெனப்படா தெல்லா நூற்கும் பொதுவாகத் தந்துரைக்கப்படுவ தென்றவாறு.

வலம்புரிமுத்திற் குலம்புரி பிறப்பும் என்பது, இலங்கு நீர்ப் பரப்பின் வளையை மீதிக் கூறிய வலம்புரி பயந்த நித்திலம் போலச் சிறப்புடைய மரபிற் பிறப்பும் என்றவாறு. எனவே, ஆசிரியரெனப் படுவார், இவ்வாறு குடிப்பிறந்தராதல் வேண்டும் என்பது கருத்து.

இனிக் கூறுவனவும் அவர்க்குக் இன்றியமையாதன. என்னை?

வான்யாறன்ன தூய்மையும் என்பது, நிலத்தியலாற்றிரியாத நீர் போலுந் தூய்மையு மென்றவாறு,

வான்யாறு நிலம் படர்ந்தன்ன நலம்படரொழுக்கமும் என்பது, ஆகாயத்துக் கங்கை யொத்த வகலிடத் தோர்க்குத் தீர்த்தமாகி யிடையறா தொழுகியாங் கொருவகையா னென்று மொழுகு மொழுக்கமு மென்றவாறு.

திங்களன்ன கல்வியு மென்பது, திங்கள் போல வழிமுறை வளர்ந்து நிரம்பிய கல்வியு மென்றவாறு.

திங்களோடு ஞாயிறன்ன வாய்மையு மென்பது, எழுச்சியுந் தாழ்ச்சியு மென்றும் பொய்யாத திங்களு ஞாயிறும் போலத் திரிவுபடாத வாய்மையு மென்றவாறு.