பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


பல பெருஞ் சிறப்பி னல்லாசிரிய ரென்பது, நல்லாசிரியரல்லாதாரு முளர். கற்பிக்கப்படாதாரென்றது பெற்றாம். கற்கப்படுமாசிரியர் நால்வரெனவும், அவர்தாம், மலை நிலம்பூதுலாக் கோல்; கழற்குடம், மடற்பனை, முடத்தெங்கு,குண்டிகைப் பருத்தியெனுமிவற்றோ டொப்ப ரெனவுங் காட்டி இலக்கணங் கூறுவாரு முளர். அவருள், கற்கப்படாதார் ஆசிரிய ரெனப்படார். என்னன?

அவர் நூற்குபகாரப் படாமையி னென்பது, கற்கப்படாத மாணாக்கரு மவ்வாறே ஆராயப்படாரென்பது. இனிக் கற்கப் படுமாசிரியரும்இந்நால்வகையான் வரையறுக்கப்பட்டார். என்னை? எட்டுவகை நுதலிய வவையகத் தானுமென் றோதினமை யானு மற்றவர்க் கின்றியமையாக் குணம் பலவாகலானுமென்பது. இனிக் கற்பிக்கப்படு மாணாக்கரு மவ்வாறே வரையறை யின்மையின், இத்துணைப் பகுதியரென வரையறுக்கப்படா ரென்பது கொள்க என்றாராகலின், ஈவோன் றன்மை யென்புழி ஒருமை கூறியவாறு போல, வீண்டு மொருமை கூற வமைவதனைப் பல்பெருஞ் சிறப்பினல்லாசிரிய ரெனச் சிறப்பித்துப் பன்மை கூறிய தென்னை யெனின், ஓதப்பட்ட விலக்கண முழுது முடை யாரைத் தலையாயினா ரெனவும் நல்லாசிரியர் மூவகைப்படுவ ரென்றற்குப் பல்பெருஞ் சிறப்பினல்லாசிரியர் ரென்பது கொள்வோன் றன்மை யென்றற் போல வாராதோ வெனின், வொருமை கூறவமைவதனை மாணாக்கரெனச் சிறப்பித்துப் பன்மை கூறுபவாகலான் அவர்க்கு மவ்வாறே தலை, யிடை, கடையென மூன்று பகுதியுங் கொள்க.

அறனே பொருளே யன்பெனு மூன்றி னென்பது, அவ்வாசிரி யராற் கற்பிக்கப்படுவா ரித்துணைப் பகுதிய ரென்றவாறு.

திறனறி பனுவல் செப்புங் காலை யென்பது, இம்மூன்றுங் காரணமாக வொருவர்க் கறிவு தோன்ற நூலுணர்த்து காலை யென்றவாறு. அதனுதலிச் சொல்லப்படுவோ ராசான் மகனுந் தன்மகனும் வழிபடுவோர் முதலாயினாரும்; என்னை?

அறனென்ப தொழுக்க மாதலின்; பொருள் கருதிச்சொல்லப் படுவார், அரசன் மகன் முதலாக யாவராயினும்பொருள் கொடுப்போ ரென்றவாறு, அன்பு கருதிச் சொல்லப்படுவோர்