பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியப் பொதுப் பாயிரம்

239


உரைகோளாளருந் தமரி லுறுப்பொத்த மாக்களுமென வித்தொடக்கத்தார்; இனி யவர திலக்கணங் கூறுகின்றவாறு.

முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினு ளேற்பவை யுடையராகியென்பது, முன்னராசிரியர்க் கோதப்பட்ட வெண் வகை யுறுப்பினுட் கல்வியு நடுவு நிலைமையும் போல்வன சில வாழிந்தன வெல்லா முடையாராகல் வேண்டு மாணாக்கர்க்காசிரியர் திறனறி பனுவல் செய்யுங்காலை யென்றவாறு.

இன்னு மாணாக்கர்க் குரியனவே சொல்லுகின்றார்.

பாற்படச் சொல்லிய பொருளைச் சொல்லியாங் குணர்தலு மென்பது, பூவையுங் கிளியும் போல வாசிரியன் சொன்ன வகையானே யிது பொருளெனக் கொண்டுணர்தலு மென்றவாறு.

இவ்வாசிரியனே, நன்றுந் தீதுந் தெரிந்துணர்த்தப்படார்.

சொல்லிய வகையொடு சூழ்ந்து நன்கறிதலு மென்பது, ஆசிரியனிவ் விரண்டு மிச் சூத்திரத்திற் குரையென்று ணர்த்தியக் கால், நன்று தீதென் றாய்ந்து நன்றறிதலு மென்றவாறு. எனவே அன்னமும் பன்னாடையும் போலக் குற்றமுங் குணனும் வேறுபடுக்கவல்லா னென்றவாறு.

தன்னே ரன்னோர்க்குத் தான் பயன்படுதலு மென்பது, தன்னோ டொருசாலை மாணாக்கருக்குத் தானொரு பயன் படுதலு மென்றவாறு. அஃதாவது இனங் காக்கும் யானை போல வெல்லார்க்கும் நன்னெறி காட்டலும், பெருமிதப்படுந் துகடீர்க்குமாறு போல விடர்ப்பட்ட பொருள் வயினுணர்வும் அடுத்தினிது செலுத்தலும் வல்லா னென்றவாறு.

செய்ந் நன்றியறிதலு மென்பது, ஆசிரியனாற் பெற்ற தனைக் குரங்கெறி விளங்காய் போலக் கொள்ளா திவனாற் பெற்ற திதுவென்று கடைப்பிடித்தலு மென்றவாறு.

தீச்சார் வின்மையு மென்பது, கற்கத் தொடங்கிய நூல் கிடப்ப மற்றொன்றின் மேன் மனம் வையாமையு மென்றவாறு. எனவே, எருமையுந் தோணியும் போனின்று பயன் கொள்வுழிக் குன்றுவ செய்யமையும், நின்றுழி நில்லாமற் பிறரான் வேறிடத் துய்க்கப்படாமையு மென்றவாறு.