பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


மடிதடுமாற்ற மானம் பொச்சாப்புக் கடுநோய் சீற்றங்களவே காம மென்றிவை யின்மையு மென்பது, இவ்வெட்டு மில்லாமையு மென்றவாறு. மடியென்பது, கூற்றின்மை, தடுமாற்றமென்பது, நூற்கற்குங்காற் சிதைய வெல்லா நூலுள்ளுஞ் சிறிது தொடங்கித் தடுமாறுதல்; மானமென்பது, ஆசிரியர்க்குக் குற்றேவன் முதலான வற்றுக் கண் மானங்கோடல் பொச்சாப் பென்பது, ஆசிரியனையும் நூலையுந் தெய்வம் போல் மதித்திருப்பச் செய்யா திகழ்ந்திருத்தல். இவையுங் கல்விக் கிடையூறாகிய பெரும் பிணியுஞ் சினமுங் களவுங் காமமு மென்றிவை யில்லாதாயும் என்றவாறு.

அறத்துறை வழாமையு மென்பது, அங்ஙனம் வழிபடுங்கால் தன்னிலைமைக்கும் ஆசிரிய னிலைமைக்குந் தக்கவாற்றான் வழிபடுதலு மென்றவாறு.

குறிப்பறிந்த தொழுகலு மென்பது, ஆசிரியன் சொல்லாது குறித்தனவாயின வெவையு மவன் குறிப்பறிந்து செய்தலு மென்றவாறு.

கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலு மீட்டவை வினாதலும், விடுத்தலு முரைத்தலு முடையராகி என்பது. கேட்ட பொருளைப் பின்னும் மாராய்தலும் பாதுகாத்தலும், மறித்துப் பிறரை வினாதலும் வினாவுவார்க்கு விடை கூறுதலும் பிறர்க்குரைக்கு மியல்பு முடையாராகி யென்றவாறு.

நடையறிந்தொழுகு நன்மாணாக்கரென்ப சொல்லப்பட்ட விலக்கணங்களொடு வழக்கறிவு நன்மாணாக்கர் மூவகைப் படுவரென்று சொல்லுவாராசிரிய ரென்றவாறு.

மண்மிசைத் தொன்னூற் பரவைத் துணிபுணர்ந் தோரே என்பது, உலகத்துப் பழைய நூற்பரப்புக்களிற் றுணிந்து பொளுணர்ந்து துறை போகுவரென்றவாறு. 'ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன்றன்மையுங் கோடன்மரபு' மென நான்கு மிப்பொதுப் பாயிரத்துள்ளே கண்டு கொள்க. ஒழிந்தன வுளவாயினு முரையிற் கொள்க.

பொதுப் பாயிரம் முற்றும்